ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை மூன்று முறை நிலநடுக்கம்..!! நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை மூன்று முறை நிலநடுக்கம்

Earthquake today Jaipur: ஜெய்ப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர் இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் மூன்று முறை உணரப்பட்டது. இதற்கான ஆதாரங்களை நிலநடுக்க பதிவுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ளது. சுமார் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம் மூன்று முறை உணரப்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதும் மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் அடைந்தனர்

இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

முதல் நிலநடுக்கம்

ஜெய்ப்பூரில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவானது.

இரண்டாவது நிலநடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான இரண்டாவது நிலநடுக்கம் அதிகாலை 4.22 மணிக்கு ஏற்பட்டது.

மூன்றாவது நிலநடுக்கம்

மூன்றாவது நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக, அதிகாலை 4.25 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

<<– For More Trending News Click Here –>>

Leave a Comment