50+ தமிழ் விடுகதைகள் | Vidukathai Tamil
Vidukathai Tamil: புதிர்கள் என்பது நமது சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை சவால் செய்யும் வார்த்தைப் புதிரின் ஒரு வடிவமாகும்.
புதிர்கள் பல நூற்றாண்டுகளாக உள்ளன, அவற்றின் தோற்றம் பண்டைய நாகரிகங்களுக்கு முந்தையது. அவை நாட்டுப்புறவியல், இலக்கியம் மற்றும் வாய்வழி மரபுகளின் ஒரு பகுதியாக இருந்து, வரலாறு முழுவதும் மக்களின் மனதைக் கவர்ந்தன. புதிர்கள் பல்வேறு வடிவங்களில் வருகின்றன, மேலும் அவை கணிதம், மொழி மற்றும் பக்கவாட்டு சிந்தனை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கும்.
ஒரு புதிரைத் தீர்ப்பதற்கு பெரும்பாலும் வெளிப்படையானதைத் தாண்டிப் பார்க்க வேண்டும். இது துப்புகளை பகுப்பாய்வு செய்வது, வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கருத்தில் கொள்வது மற்றும் தொடர்பில்லாத கூறுகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துகிறது.
50+ Tamil Vidukathaigal | Vidukathai Tamil
1) உறைக்குள் இருக்கும் உயிரைப் பறிக்கும்.
விடை : கத்தி
2) நான் போகாத பொந்துக்குள்ளே என் தம்பி சங்கரன் புகுந்து விட்டான்.
விடை : ஊசி நூல்
3) வா என்று கூப்பிடும். போ வென்று சொல்லும். ஆனால் வாய் திறந்து பேசாது.
விடை : தொழிற் சாலை சங்கு
4) மூன்று கொம்புமாடு ஒரு கொம்பால் முட்டுது.
விடை : நெருஞ்சிமுள்
5) கணுக்கால் நீரில் கரடி நீச்சல் போடுது.
விடை : தவளை
Vidukathai Tamil
1) எட்டாத கொம்பில் மிட்டாய்ப் பொட்டலம்.
விடை : தேன்கூடு
2) மூடாத தொட்டியில் எடுக்க எடுக்க நீர்.
விடை : கிணறு
3) மாமன் வீட்டுத் தோட்டத்திலே மஞ்சள் குருவி ஊசலாடுது.
விடை : எழுமிச்சை பழம்
4) உடைந்த வெள்ளிக்கு, ஒக்கிட ஆசாரி இல்லை.
விடை : அரிசி
5) ஏழை படுக்கும் பாயை எடுத்துச் சுருட்ட ஆளில்லை.
விடை : பூமி
தமிழ் விடுகதைகள்
1) வெட்கங் கெட்ட புளியமரம் வெட்ட வெட்ட வளருது.
விடை : தலைமுடி
2) சித்திரைப் பின்னல் கோட்டைக்குள்ளே போசு வழியுண்டு, வர வழியில்லை.
விடை : பட்டு பூச்சி
3) கரையும், உப்பு அல்ல, தண்ணீரில் குளிப்பான், மனிதனுமல்லன்.
விடை : சோப்பு
4) ஊளை மூக்கன் சந்தைக்குப் போகிறான்.
விடை : நுங்கு
5) கருப்புச் சட்டைக்காரன் காவலுக்குக் கெட்டிக்காரன்.
விடை : பூட்டு
6) மூக்குத்தி போலப் பூப்பூக்கும் அப்பாடா என்று காய்காய்க்கும்.
விடை : நெருஞ்சி முள்
7) ஊருக்கு உழைக்கும் உத்தமன் உரக்க ஊதி குரல் எழுப்புவான்.
விடை : சங்கு
8) பூமியிலே பொன் மரப்பாச்சி புதைத்து வைத்திருக்கிறது.
விடை : மஞ்சள்
9) தூங்கவும் வைப்பான் தூக்கியும் வீசுவான்.
விடை : காற்று
10) உதைப்பட்டவன் உறுமிக் கொண்டு ஓடினான்.
விடை : ஸ்கூட்டர்
விடுகதை வினா விடைகள் – Vidukathai
1) சின்னச்சின்ன பெட்டிக்குள்ளே சேதி எல்லாம் கண்ணுக்குள்ளே.
விடை : டெலிவிசன்
2) தாய் தரையில், மகள் மகுடத்தில்.
விடை : சிப்பி – முத்து
3) இடதும் வலதுமாய் நகரும், பாதுகாப்புக்கு மட்டும் மூடிக்கொள்ளும்.
விடை : கண்கள்
4) தீவட்டி சுமந்தவனுக்கு விடிய விடிய தூக்க மில்லை.
விடை : மெழுகுவர்த்தி
5) எட்டடி குச்சுக்குள்ளே இறைவா நான் எத்தனை நாளிருப்பேன்.
விடை : உடம்பு
6) நின்றவன் நின்றபடி, மாலைகளைச் சுமந்தபடி.
விடை : சிலை
7) மரக்கிளை சுமந்தபடி காட்டுக்குள் பயணம் செய்வான்.
விடை : மான்
8) வாசலைத் தாண்டி வர மாட்டான் – ஆனால் வம்புச் சண்டைக்கு காரணமாக இருப்பான்.
விடை : நாக்கு
தமிழ் விடுகதை வினா விடைகள் – Tamil Vidukathaigal.
1) அந்தரத்தில் ஆடும் வீடு ஆபத்தில்லாத அழகு வீடு.
விடை : தூக்கணாங்குருவி கூடு
2) மூடி வைத்த பெட்டிக்குள் சத்தாக இரண்டு தைலம்.
விடை : முட்டை
3) அண்ணன் தம்பி பன்னிருவர் – ஒருவன் மட்டும் குறைப் பிரசவத்தில் பிறந்தான்.
விடை : 12- மாதங்கள்- பிப்ரவரி
4) ஆளில்லாத வீட்டு வாசலில் எதிர் கொள்வான் வகையுள்ள காவல்காரன்.
விடை : பூட்டு
5) கரடுமுரடு மனிதனிடம் கனிவான இனிப்பு.
விடை : பலாப்பழம்
6) வளைந்து தெளிந்தவன் பயணத்திற்கு உதவுவான்.
விடை : சாலை
7) யாரும் அடிக்காமலே டமாரம் ஓசை.
விடை : இடிமுழக்கம்
விடுகதைகள் Answer in Tamil
1) அந்தரத்திலே தொங்குது செம்பும் தண்ணீரும்
விடை : இளநீர்
2) நீல நிற மேடையிலே கோடி மலர் காயுது
விடை : விண்மீன்கள்
3) நன்றாகச் சுமை தாங்கும், நன்றாக உதை உதைக்கும்.
விடை : கழுதை
4) எங்கப்பன் ஊர் சுற்றி, எங்கள் அம்மா குந்தாணி.
விடை : பூசணிக்காய்
5) தட்டுத்தட்டாய் மல்லாந்திருக்கும் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒட்டாது.
விடை : தாமரை இலை
இதையும் நீங்கள் படிக்கலாம்….