Jailer Review: ஜெயிலர் படம் எப்படி இருக்கு ? வெளியான FDFS live அப்டேட்ஸ்..! | Jailer Movie Review In Tamil

Jailer Review: ஜெயிலர் விமர்சனம்..படம் எப்படி இருக்கு ? Jailer Movie Review In Tamil

Jailer Movie Review In Tamil: நடிகர் ரஜினிகாந்தின் ஜெய்லர் படம் வெற்றிகரமாக உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் இன்று திரையிடப்பட்டுள்ளது இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் பல்வேறு மக்கள் பார்த்து கண்டு மகிழ்ந்து வருகின்றனர்

ஜெயிலர் படம் வெளியானது | Jailer Movie Review In Tamil

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது படமான “ஜெயிலர்” இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார் இதில் ரஜினிகாந்த் நடிகராக நடித்துள்ளார்.

இப்படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, விநாயக், வசந்த் ரவி, மிர்னா மற்றும் பலர் நடித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Jailer Movie Review In Tamil
Jailer Movie Review In Tamil

ரஜினி ரசிகர்களுக்கு இன்று திருவிழா. ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு, தலைவர் ரஜினியை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் வந்தனர்.

ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், தமிழகத்தில் ஜெயிலர் படம் 9 மணிக்கு வெளியானது, ஆனால் பெங்களூருவில் காலை 6 மணிக்கு படம் வெளியானது இதனால் தமிழக ரசிகர்கள் பெருவிற்கு படையெடுத்தனர் தலைவரை பார்ப்பதற்கு. இதனால் பெங்களூருவில் ஜெயிலர் படத்திற்கு டிக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கிட்டத்தட்ட 1100 Plus திரைகளில் வெற்றிகரமாக ஜெயிலர் படம் திடையிடப்பட்டுள்ளது முதல் நாளான இன்று.

இதைத் தொடர்ந்து ரசிகர்கள் தலைவர் ரஜினிகாந்தின் உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்தும் கட்டவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்தும் தங்களுடைய அன்பையும், அவர் மேல் வைத்துள்ள மரியாதையும் வெளிப்படுத்தி வருகின்றனர். சிலர் ஒரு படி மேலே சென்று அவருக்கு பூஜை செய்தும் கோயில்களில் அன்னதானம் செய்தும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

மேலும் ஜெயிலர் படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வந்தாலும் இந்த படம் தலைவர் ரஜினிகாந்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொண்டு சேரும் என்று படத்தை பார்த்த பல்வேறு தரப்பினர்கள் ட்விட்டரில் டூர் செய்து வருகின்றனர் மற்றும் தங்களுடைய விமர்சனங்களை ஆன்லைனில் பதிவு செய்தும் வருகின்றனர்.

ஜெயிலரின் முதல் பாதி நன்றாக இருந்ததாகவும், குறிப்பாக ரஜினி மற்றும் யோகி பாபுவின் காட்சிகள் நகைச்சுவையாக இருப்பதாகவும் படத்தைப் பார்த்த ஒரு சிலர் பரவசத்துடன் கூறி வருகின்றனர். மேலும் சிலர் முதல் பாதியில் காமெடி, சென்டிமென்ட், ஆக்‌ஷன் என அனைத்தும் நன்றாக இருப்பதாகவும், அனிருத்தின் இசை மிகவும் நன்றாக உள்ளது என்றும் கூறினர்.

இதைத்தொடர்ந்து இடைவேளையின் போது வரும் ஆக்சன் சீன் மிகவும் திரிலாகவும் நல்ல ஸ்கிரீன் ப்ளேவாகவும் உள்ளது என்றும் பல்வேறு தரப்பினர் ஜெயிலர் படத்தைப் பற்றி புகழாரம் சுற்றி வருகின்றனர்

இரண்டாம் பாதியில் பல திருப்பங்களும் ஆச்சரியங்களும் இருக்கும் என்றும் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்றும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

களைகட்டும் கொண்டாட்டம் | Jailer Movie Review In Tamil

ஜெயிலர் ரிலீஸுக்காக ஒட்டுமொத்த திரையுலகமே காத்திருக்கும் நிலையில், இதற்கு முன் வெளியான பாடல்களும், இசை வெளியீட்டு விழாவும், டிரைலரும் ரசிகர்களை முழுவதுமாக திருப்திப்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

Jailer Movie Review In Tamil
Jailer Movie Review In Tamil

கடைசியாக ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படம் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது அதேபோன்று இந்த படமும் இருக்கும் என்று ஒரு சிலர் நம்பி படத்தை பார்க்காமல் இருப்பது அவர்களுக்கு பெரிதும் ஏமாற்றம் எனவே இந்த படம் மிகவும் அருமையாக உள்ளது.

எனவே அனைவரும் படத்தைக் கண்டு மகிழுமாறு பல்வேறு தரப்பினரும் படத்தை பார்த்தவர்களும் கூறி வருகின்றனர் மற்றும் நெல்சன் நம் அனைவரையும் ஏமாற்றவில்லை பீஸ்ட் படத்தைப் போல. இந்த படத்தை வேறு லெவலாக எடுத்து வைத்துள்ளார் திரைக்கதை ,வசனங்கள் ,பாடல்கள் ,இசை, ஸ்கிரீன் ப்ளே , ட்விஸ்டுகள் உண்டு பல்வேறு விதமான ஆச்சரியங்களும் இந்த படத்தில் உள்ளது.

இதனால் ரசிகர்கள் வழக்கத்தை விட அதிகமாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் சிறப்பு வழிபாடு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல், அன்னதானம், ரத்ததானம் என பல்வேறு கட்டங்களாக ஜெயிலர் விடுதலை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

Jailer Movie Review In Tamil: தியேட்டர்களில் முதல் நாள் சோவை பார்ப்பதற்கு ரசிகர்கள் விடிய விடிய கண்விழித்து தலைவரின் தரிசனத்தை அவரவர்கள் பதிவு செய்த தியேட்டர்களில் கண்டு மகிழ்கின்றனர். அதேபோன்று ஜெயிலர் படமும் ரசிகர்களை ஏமாற்ற வில்லை படமும் மிகவும் நன்றாக உள்ளது.

1 thought on “Jailer Review: ஜெயிலர் படம் எப்படி இருக்கு ? வெளியான FDFS live அப்டேட்ஸ்..! | Jailer Movie Review In Tamil”

  1. The Entry Dr. Shivarajkumar Tamil Movie 1980 but Dr. Rajkumar said do only kannada. PAN India Movie Multi languages Now Dr .Shivarajkumar Play Tamil Jailer Movie. We Karnataka People’s welcome with Pleasure also do many Tamil PAN India movies
    @
    Friends for Ever.
    Unique style Prabhakaran

    Reply

Leave a Comment