ஊரே வியக்க நாய்களுக்கு நடந்த திருமணம்..! | Dogs To Get Married In Indian Style Ceremony
செல்லப்பிராணிகளுக்கு எப்போதும் நம் இதயத்தில் தனி இடம் உண்டு. செல்லப்பிராணிகள் குடும்பத்தின் ஒரு அங்கமாக கருதப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு குடும்பம் இந்திய மரபுப்படி தங்கள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்தது. மேலும் சில ஆயிரம் செலவு செய்து திருமணத்தை கொண்டாட்டமாக கொண்டாடி உள்ளார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரியோ மற்றும் ரியா என்ற இரண்டு நாய்களுக்கு அவர்களது குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். வீடியோவில், ரியோ ஒரு சிறிய ரோபோ காரில் திருமண இடத்திற்கு அழைத்து வரப்பட்டார்..
அதன் பிறகு, ரியா திருமண ஆடையை அணிந்து, இருவரும் திருமண மேடையில் அமரவைக்கப்படுகின்றனர். மேலும் இரு வீட்டாரும் மாலைகளை மாற்றி திருமணம் செய்து வைக்கின்றனர்.
இரு வீட்டாரும் ஆடல் பாடலுடன் நாய்களை ஆசிர்வதித்தபடி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மேலும் மணமக்களை வாழ்த்திய அனைவருக்கும் திருமண உணவும் வழங்கப்படுகிறது.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
<<– For More Trending News Click Here –>> |