நண்பர்கள் தின வாழ்த்துக்கள் | Friendship Day Wishes In Tamil
Friendship Day Wishes In Tamil | Friendship Day Quteos In Tamil: உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நிகழ்வாகும். இந்த நாளில், ஒருவருக்கொருவர் தோழமைக்காக தங்கள் அன்பையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்க நண்பர்கள் ஒன்று கூடுவார்கள். இந்த நாள் நம் வாழ்வில் நட்பின் முக்கியத்துவத்தையும், அது நமது நல்வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் நினைவூட்டுகிறது.
சர்வதேச நண்பர்கள் தினம் என்பது எல்லைகள், கலாச்சாரங்களைத் தாண்டிய அழகிய நட்பின் பிணைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய கொண்டாட்டமாகும். நட்பின் முக்கியத்துவத்தை மதிக்கவும், அவை நம் வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை அங்கீகரிக்கவும் ஒரு நாள். இந்த சிறப்பு நாள் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது,, ஆனால் சாராம்சம் அப்படியே உள்ளது.
நண்பர்கள் தின வாழ்த்து கவிதைகள் | Friendship Day Wishes In Tamil
இந்த உலகில் இரத்த பந்தம் இல்லாமல் நமக்காக துடிக்கும் ஒரே உறவு நண்பர்கள்தான். அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!

தோள் கொடுக்க தோழனும் தோள் சாய தோழியும் கிடைத்தால் அவர்கள் கூட தாய் தந்தை தான்… Happy Friendship Day..!!

எங்கோ பிறந்து இதயத்தில் இணைந்து வாழ்வில் பயணிக்கும் உன்னத உறவு நட்பு மட்டுமே! இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.!!

வாழ்வில்.. தடுமாறும் போது தாங்கி பிடிப்பவனும்.. தடம் மாறும் போது தட்டி கேட்பவளும் தான்.. உண்மையான தோழன் / தோழி! Happy Friendship Day..

நான் சிரித்தால் என் மகிழ்ச்சியிலும் நான் அழுதால் என் கண்ணீரிலும் எனக்காய் நிற்பவன் என் நண்பனே! Happy Friendship Day..!!

யாரிடம் நீ நீயாக இருக்க முடிகிறதோ அவன்தான் உன் நண்பன்… Happy Friendship Day..!!

கடவுளால் எப்போதும் கூட இருந்து கவனிக்க முடியவில்லை என்று தான் நண்பனை அனுப்பி வைத்தான் உலகத்தில்… Happy Friendship Day..!!

நம்முடைய வாழ்க்கைக்காக கவலைப்படுகின்ற ஒரு நண்பன் கிடைப்பது நம் வாழ்வில் கிடைத்த வரம்.. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!

கடலுக்கும் எல்லைகள் உண்டு காதலுக்கும் எல்லைகள் உண்டு ஆனால் நட்புக்கு எல்லைகள் என்பதே இல்லை அனைவருக்கும். இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

பொதுவாக ஆண்கள் பெண்கள் முன் அழ மாட்டார்கள் ஆண்களின் கண்ணீரை காண்பவர்கள் நண்பர்கள் மட்டுமே. இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!

நமக்காக கவலைப்படும் நண்பர்கள் இருக்கும் வரை தினந்தோறும் நண்பர்கள் தினம் தான். இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!!

Happy Friendship Day Wishes In Tamil
நம்மை புரிந்துக் கொண்ட ஒரு நண்பன் நம்மோடு இருப்பது ஆயிரம் நண்பர்களுக்கு சமம்.
சுயநலத்துக்காக நம்மை பயன்படுத்தாத நண்பர்கள் கிடைப்பது வரம் Happy Friendship Day
Happy Friendship Day அடுத்தவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு நண்பர்கள் இருப்பது வரம்
காசு இல்லாதவன் ஏழை அல்ல நல்ல நண்பன் இல்லாத ஒருவனே ஏழை ! உள்ளத்தால் பணக்கார்களாக இருக்கும் ஒவ்வொரு நட்புகளுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
வாழ்வில் இன்பமோ துன்பமோ எதுவாக இருந்தாலும் நாம் முதலில் பகிர்ந்து கொள்வது நம் நட்பிடம் தான்
எனக்கு கிடைத்த பெரிய வரம் என் நண்பர்கள்.
கஷ்டம் வந்தால் கடவுளிடம் செல்பவர்களை விட நண்பர்களிடம் செல்பவர்கள் தான் அதிகம்.. ஏனென்றால், எந்த உறவு கைவிட்டாலும் அந்த உறவு நம்மை எப்போதும் கைவிடாது.. அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
Friendship Day Quteos In Tamil
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து உயிரில் கலந்தோம் இங்கு நண்பர்களாக
நண்பர்கள் கூட இருக்கும் வரைக்கும் கவலைகள் இல்லை மகிழ்ச்சி மட்டுமே..
நண்பர்கள் தினத்தின் வரலாறு |
நம்முடைய இன்பத்தில் மட்டுமல்ல துன்பத்திலும் நம்முடன் இருப்பவனே உண்மையான நண்பன்
பணத்தை மட்டும் சேர்க்காமல் நண்பர்களையும் சேர் வாழ்வில் மகிழ்ச்சி வேண்டுமென்றால்
Nanbargal Dhinam Valthukkal
தாய்க்கு தெரியாத ரகசியங்கள் கூட நண்பர்களுக்கு தெரியும் தாயை விட நான் நம்பிக்கை வைத்திருப்பது உன்னிடம் தான்
கண்கள் பார்க்காமல் இருக்கலாம் ஆனால் நம் நட்பின் நினைவுகளே போதும், இதயம் உன்னை மறவாமல் இருக்க !!!
உலகத்தில் காதலின் பிரிவை விட கொடுமையானது பல வருடங்கள் பழகிய நட்பின் பிரிவு
சிலருக்கு நட்பு காதலாகிறது ஆனால் சிலருக்கு காதலே நட்பாகிறது
நண்பர்கள் தினம் கவிதைகள்
நம்மோடிருந்து நம்மை விட்டு பிரிந்த நண்பனின் அன்புக்கு ஈடாக இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை
ஒட்டி பிறக்கவில்லை என்றாலும், பார்வை இரண்டும் நோக்கம் ஒன்றே. ஒர் தாய் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நம் நட்பின் நாடி துடிப்பு எப்போதும் ஒன்றே நண்பா…! *நண்பர்கள் தின வாழ்த்துக்கள்*
நண்பர்களுடன் பழகிய காலம் கடந்து போகலாம். ஆனால், பழகிய நினைவுகள் நித்தம் புதிதாக மலர்கிறது மனதுக்குள். *உலக நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!*
Nanbargal Dhinam Valthukkal In Tamil
பேசாமல் இருந்தாலும் பாசம் குறையாது நம் நட்பு. தொலைவில் இருந்தாலும் தொடரட்டும் நம் நட்பு. *நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
சாதனையில் இணைபவனை விட, சோதனையில் இணைபவனே உண்மையான நண்பன். நண்பேன்டா! *நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்!*
உயிர் வலியை உணரும் தருணங்களில், உரிமை எடுத்து தோள் சாய இடம் கொடுக்கும் தோழி கிடைப்பது என்பது பெரும் வரமே…! *அன்பு தோழிக்கு *நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்*
யோசித்து வந்தால் அது உறவு, நேசித்து வந்தால் அது காதல், யோசிக்காமல், நேசிக்காமல் வந்தால் அது தான் நட்பு! *Happy Friendship Day!*
நட்பு என்பது! நமக்கு தெரியாமல் நமக்காக துடிக்கும் நம் மற்றோர் இதயம்! *இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!*
முக்கியத்துவம்நண்பர்கள் தினத்தின் |