GT vs RR ஒரு கேட்ச் பிடிக்க 4 வீரர்கள்.!! கடைசியில் நடந்த டிவிஸ்ட்.!!
அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் அட்டகாசம் நடந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ள குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
தொடக்கம் முதலே குஜராத் அணி ஆக்ரோஷமாக விளையாட முயற்சித்தது. போட்டியின் 3வது பந்தில் விரித்மான் சாஹா பவுண்டரி அடிக்க விரித்மான் சாஹா முயற்சிக்கிறார். பின்னர் பந்து மேலே சென்றது.
இந்த பந்தை பிடிக்க விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், சிம்ரன் ஹெட்மயர் மற்றும் மற்றொரு வீரர் வந்தபோது பவுலர் போல்ட் அருகில் நின்றார். அப்போது, ஹெட்மயர் மற்றும் சஞ்சு சாம்சன் பந்தை பிடிக்க முயன்றார்.
இவர்கள் மூன்று பேரிடமும் பந்து மாட்ட வில்லை இறுதியில் பக்கத்தில் நின்று கொண்டிருந்த போல்ட் கையில் வந்து பந்து விழுந்தது இதனால் இந்த கேட்சை எளிதில் பிடித்தார் இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு காமெடியான சம்பவமாக இருந்தது.
<<– For More Trending News Click Here –>> |