ஆடி மாதத்தில் ஏன் புதுமண தம்பதிகள் ஒன்று சேர கூடாது? இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம்..!!
ஆடி மாசம் பொறந்தாச்சு புதுமண தம்பதிகளை தலை ஆடி பண்டிகைக்கு அழைத்துப் போய் மணக்க மணக்க விருந்து செய்து போட்டு ஆடைகளை கொடுத்து பாணைகள் நிறைய நிறைய பலகார சீர்கெடுத்து அனுப்புவார்கள்.
கிராமங்களில் இன்றைக்கும் ஆடிப் பண்டிகை அப்படித்தான் கொண்டாடப்படுகிறது இந்த ஆடி மாதத்தின் திருமணம் நடத்த மாட்டார்கள் புதுமண தம்பதியர் சேரக்கூடாது என்றும் சொல்லி பிரித்து வைப்பார்கள்.
இன்றைய காலை இளைய தலைமுறையினருக்கு இதெல்லாம் மூடநம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இதை எல்லாம் முன்னோர்கள் காரணம் இல்லாமல் செய்திருக்க மாட்டார்கள் என்ன காரணத்திற்காக ஆடி மாசம் திருமணம் நடத்துவதில்லை சாந்தி முகூர்த்தம் குறிப்பதில்லை, புதுமணத் தம்பதிகளை சேர விடுவதில்லை என்று இப்போது பார்க்கலாம்..
ஆடி மாதத்தில் தம்பதியர் இணைந்தால் கரு உருவாகும் ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் பிள்ளை பிறக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சித்திரை மாதத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் அதனால் பிறக்கும் பிள்ளைக்கும் பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும் இதனால் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று சினிமாவில் வசனங்கள் பேசப்படுகின்றன.
கத்திரி வெயில் காலமான சித்திரையில் தளர்ச்சான் குழந்தை பிறந்தால் சீரழியும் என்றும் அதோடு தகப்பனுக்கு ஆகாது என்று மூடநம்பிக்கையை பரப்பி விடுகின்றனர். இதற்காகத்தான் தம்பதிகளை பிரிக்கின்றனர் என்றும் சொல்லப்படுகிறது. உண்மையா என்று கேட்டால் இல்லை என்று சொல்ல வேண்டும்.
இதற்குப் பின்னால் இருக்கும் ரகசியம்..!!
சித்திரை மாதத்தில் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பிரசவித்த தாய்க்கு பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே சித்திரை மாதம் குழந்தை பிரசவிப்பதை தள்ளி போடுவதற்காகவே, ஆடியில் கருத்தரிக்காமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.
ஆடி மாதத்தில் மழையும் காற்றும் அற்புதமாக இருக்கும் ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி ஆடி மாதத்தில் உழவு பணிகளை மேற்கொள்கின்றனர் திருமணத்திற்கு பணத்தை செலவு செய்வது சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினாலும் ஆடியில் திருமணங்கள் நடத்துவதில்லை.
ஆடியில சேதி மட்டும் சொல்லிவிட்டு, அடுத்த மாதமான ஆவணியில் பரிசம் போட்டு திருமணம் நடத்துகின்றனர். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் கலைகட்டும் இறை வழிபாட்டிற்காக இந்த மாதத்திலே ஒதுக்க வேண்டும்.
என்பதற்காகவே ஆடி மாதத்தில் திருமணங்களை நடத்துவதில்லை ஆடி மாதம் தவம் இருந்து அன்னை பார்வதி தனது கணவர் சிவபெருமானை இணைந்தார் இதனை நிறைவு போடும் விதமாகவே ஆடித்தவசு பண்டிகை சிவ ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது.
கணவன் மனைவி ஒற்றுமை அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினையை உண்டாக்கினாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும்.
கணவனும் மனைவியின் மனதை புரிந்து கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லங்களை நாடிச் செல்ல வேண்டும் என்பதை புராணங்கள் நமக்குச் சொல்லுகின்றன.
கணவனின் நலனே தன் நலன் என மனைவியும் மனைவியின் துணையே தன் பலம் என கணவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் எந்த சுப நிகழ்ச்சியும் செய்யக்கூடாது என்ற கருத்தும் நிலவுகிறது.
Newly married couple why separated in the month of aadi here the reason: எனவே தான் திருமணங்களும் ஆடி மாதத்தில் செய்யப்படுவதில்லை என்கின்றனர் முன்னோர்கள்.
இதையும் படிக்கலாமே…..
பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palan In Tamil |