ஆமா… நிறைய பேருக்கு TNPSC குரூப் 4 ரிசல்ட் வரவில்லையே ஏன்.. வெளியான “முக்கிய” காரணம்..!!
சென்னை, தமிழ் தகுதித் தேர்வில் 5 லட்சம் பேர் தோல்வியடைந்துள்ளதால், பலருக்கு குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை என டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்று முதன்முறையாக கொண்டு வந்துள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு கடந்த ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. குரூப்-IV தேர்வை மொத்தம் 18 லட்சத்து 36,535 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என TNPSC ஏற்கனவே அறிவித்திருந்தது.
குரூப்-4 தேர்வு
இதனிடையே, அரசுப் பணிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு விதிகளில் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால், குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பொதுவாக தேர்வு முடிவுகள் 2 அல்லது 3 மாதங்களில் வெளியாகும்.
8 மாதங்கள் தாமதம்
ஆனால், இந்த முறை 8 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். சில நாட்களுக்கு முன்பு, ட்விட்டரில் ஹேஷ்டேக் வைரலானது. இதையடுத்து, இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என TNPSC உறுதி அளித்தது.
முடிவுகள் வெளியீடு
மேலும், சில நாட்களுக்கு முன்பு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை 7,381ல் இருந்து 10,117 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்நிலையில், TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை மார்ச் 24ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் அளித்த புகார்கள்
இதனிடையே, ஒரே மையத்தில் குரூப்-4 தேர்வு எழுதிய 2,000 பேர் தேர்ச்சி பெற்றதால், தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமின்றி குரூப்-4 தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வர்கள் தேர்வு முடிவுகளை அறியமுடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
TNPSC இன் விளக்கம்
அதில், குரூப்-4 தேர்வில் தமிழில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும், குரூப்-4 தமிழ் தகுதித் தேர்வில் சுமார் 5 லட்சம் பேர் தேர்ச்சி பெறவில்லை. தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாததால் பலரது தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பொது அறிவு விடைத்தாள் திருத்தப்படும் என்ற விதி முதன்முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் இதயம் படிக்கலாமே….
இது போன்ற செய்திகளை படிக்க—>> | Click Here |