நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு 2025: தயார் நிலையில் மாணவர்கள்

நாளை தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு: தயார் நிலையில் மாணவர்கள்

Plus 2 Public Examination: அரசு தேர்வுத்துறை, தேர்வுகளுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக உறுதி செய்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2024-25 கல்வியாண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி, மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தேர்வில் மொத்தம் 8,21,057 மாணவர்கள் எழுத உள்ளனர், இதில்:

3,78,545 பள்ளி மாணவர்கள்
4,24,023 பள்ளி மாணவிகள்
18,344 தனித்தேர்வர்கள்
145 சிறைவாசிகள்

மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க தினமும் 45,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு 4,800க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளன.

plus 2 public examination (3)
plus 2 public examination (3)

தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்துள்ளது.

பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்க மின்சாரத்துறைக்கும், தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள், தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களின் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவிக்க முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

plus 2 public examination (2)

தேர்வு மைய வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களுடன் ஆசிரியர்களும் தேர்வறையில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த விதியை மீறும் தேர்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள்களில் தேர்வு எண், பெயர், சிறப்பு குறியீடுகள் குறிப்பிட அனுமதி இல்லை. மாணவரின் புகைப்படம், பதிவெண், பாட விவரங்கள் ஆகியவை கொண்ட முகப்புத்தாள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். மாணவர்கள் அதை சரிபார்த்து கையொப்பமிட்டால் போதுமானது. விடைத்தாள்களை பிரிப்பது அறை கண்காணிப்பாளரின் முழு பொறுப்பாகும்.

Leave a Comment