பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Health Benefits In Tamil

பசலைக்கீரை நன்மைகள் | Pasalai Keerai Health Benefits In Tamil

Pasalai Keerai Benefits: “பசலை கீரை” என்பது தமிழில் ஒரு வகை கீரையாகும், இது “Amaranth greens” என்றும் அழைக்கப்படுகிறது. இது தென்னிந்திய உணவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு இலைக் வகையை சேர்ந்த உணவாகும், மேலும் அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நலன்கள் அதிகம் காணப்படுகிறது.

மேலும் இந்த கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது இந்த கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் உடல் உஷ்ணத்தை குறைக்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் இந்த கீரையில் உள்ளது இதை அனைவரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். இதில் இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிறைந்துள்ளது.

பசலைக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

 வைட்டமின்கள்

தாதுக்கள்

புரதம்

நார்ச்சத்து

ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்

பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits

இரத்த உற்பத்திக்கு
உடல்சூடு குணமாக
தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்
மாதவிடாய் பிரச்சனை குணமாக
ஆசனவாய் எரிச்சல் குணமாக
கண் சம்பந்தப்பட்ட நோய்
செரிமான பிரச்சனை
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
உடல் எடையை குறைக்க
பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Health Benefits In Tamil
பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Health Benefits In Tamil
இரத்த உற்பத்திக்கு

பசலைக்கீரை உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பசலைக்கீரை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது, இதனால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.

உடல்சூடு குணமாக

உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய ஒரு சில பிரச்சனைகள் என்னவென்றால் கண் எரிச்சல் வெள்ளைப்படுதல் சிறுநீர் எரிச்சல் எனவே, பசலைக்கீரையை அடிக்கடி உணவில் எடுத்து வந்தால் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நீங்கள் குணமடைவீர்கள்.

தோல் சம்பந்தப்பட்ட நோய்கள்

Pasalai Keerai Benefits: பசலைக்கீரையில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் சருமத்தை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது , அதிக வைட்டமின் சி உள்ளதால் சருமத்தை உறுதியாகவும் இளமையாகவும் வைத்திருக்க பசலைக்கீரை உதவுகின்றது. மேலும் இந்தக் கீரையில் தாதுக்கள் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் கே போன்றவை  ருப்பதால் சரும ஆரோக்கியத்துக்கு பெரிதும் பசலைக்கீரை உதவுகின்றது சருமத்தில் வீக்கம் மற்றும் சிவப்பை குறைக்கவும் சருமத்தில் வேர்க்குரு இருந்தால் அவற்றை நீங்கவும் பசலைக்கீரை பெரும் பாங்கிவாகிறது.

மாதவிடாய் பிரச்சனை குணமாக

மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்கள் பசலைக்கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் மாதவிடாய் பிரச்சனை குணமாகும் அதாவது சில பெண்களுக்கு மாதவிடாய் சரியான இடைவெளியில் ஏற்படாது அப்படிப்பட்ட பெண்கள் பசலைக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து நீங்கள் பலன் பெறுவீர்

பசலைக்கீரை பயன்கள்
Pasalai Keerai Benefits
ஆசனவாய் எரிச்சல் குணமாக

சிலர் தவறான உணவுப் பழக்கங்களினால் ஆசனவாயில் கட்டி ,எரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும் எனவே இந்த பிரச்சனைக்கு பூரண மருந்தாக பசலைக்கீரை விளங்குகிறது பசலைக்கீரையை நீங்கள் அடிக்கடி உணவில் எடுத்து வந்தால் உங்கள் பிரச்சனைகள் நீங்கும்.

கண் சம்பந்தப்பட்ட நோய்

 பசலைக்கீரையில் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்றவை, இருப்பதால் கண்களைப் பாதுகாக்கவும், கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தவும் உதவுகிறது. மேலும் பசலைக்கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியமான பார்வைக்கும், கண் வீக்கத்தை குறைப்பதற்கும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது.

செரிமான பிரச்சனை

பசலைக்கீரை செரிமானத்தை பராமரிக்க முக்கியமானது. வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது, மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது. இவை குடலைப் பாதுகாக்கவும் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவும். மேலும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளிக்க உதவுகிறது மற்றும் குடல் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பசலைக்கீரையில் உள்ள அதிகமான வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கும் ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது தொற்று மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடல் எடையை குறைக்க 

பசலைக்கீரையில் உள்ள குறைந்த கலோரி உங்களின் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள பெரிய பங்கு வகிக்கிறது எனவே பசலைக்கீரையை உணவில் எடுத்து வந்தால் பெரும் நண்மை அடைவீர்.

ஒட்டுமொத்தமாக, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக பசலைக்கீரை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். இருப்பினும், சீரான உணவு, வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் மற்றும் புகைபிடிக்காமல் இருப்பது ஆகியவை இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய காரணிகள் என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

பசலைக்கீரை ரெசிபிக்கள் | Pasalai Keerai Health Benefits In Tamil

  • பசலைக்கீரை கூட்டு
  • பசலைக்கீரை கடையல்
  • பசலைக்கீரை சாம்பார்
  • பசலைக்கீரை சப்பாத்தி
  • பசலைக்கீரை பொரியல்
  • பசலைக்கீரை சூப்
  • பசலைக்கீரை குழம்பு
TAMIL KATTURAI
கருணைக்கிழங்கு நன்மைகள் | Karunai Kilangu In Tamil

Leave a Comment