அன்னாசி பழத்தின் நன்மைகள் | Pineapple Benefits In Tamil

அன்னாசி பழத்தின் நன்மைகள் | Pineapple Benefits In Tamil

அன்னாசிப்பழம் ஒரு வெப்பமண்டல பழமாகும், இது தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது, ஆனால் இப்போது உலகம் முழுவதும் பல வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலங்களில் வளர்க்கப்படுகிறது. பழம் அதன் கூர்முனை, கரடுமுரடான வெளிப்புறம் மற்றும் இனிப்பு, ஜூசி உட்புறத்திற்கு பெயர் பெற்றது.

அன்னாச்சிப் பழம் பார்ப்பதற்கு பூ போன்ற தோற்றத்தைக் கொண்ட அன்னாச்சிப் பழம் அனைத்து காலங்களிலும் கிடைத்தாலும் இது ஒரு கோடைகால பழம் ஆகும். அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ வைட்டமின் சி நார்ச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது.

அன்னாசிப்பழம் வைட்டமின் சி அதிக அளவு உள்ளது, இது நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு முக்கியமானது, மேலும் புரோமெலைன் என்ற நொதியையும் கொண்டுள்ளது, இது அலர்ஜி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் செரிமானத்திற்கு உதவும். இதை பச்சையாகவோ அல்லது சமைத்தோ உண்ணலாம், மேலும் பழ சாலடுகள், மிருதுவாக்கிகள் மற்றும் பீட்சாவில் டாப்பிங் போன்ற பல்வேறு உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

பார்க்கும் போதே பலரது வாயில் எச்சி ஊறும் அதற்குக் காரணம் இதில் இருக்கக் கூடிய இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை தான் இவ்வளவு அழகான அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் என்ன என்ன நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

அன்னாசி பழத்தின் நன்மைகள் | Pineapple Benefits In Tamil

நோய் எதிர்ப்புச் சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது அன்னாச்சி பழம். அன்னாசி பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்க நம் உடலில் பல நோய்கள் தாக்காதவாறு நம்மை பாதுகாத்துக் கொள்கிறது அடிக்கடி நோய்வாய்ப் படுபவர்கள் அன்னாச்சி பழத்தை தொடர்ந்து எடுத்துட்டு வர நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து நோய் வராமல் தடுக்கும்.

Pineapple Benefits In Tamil
Pineapple Benefits In Tamil

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை சரியாகும் செரிமானப் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு துண்டு அன்னாச்சி பழங்களை சாப்பிடுவதன் மூலம் செரிமான பிரச்சனை நீங்கும் அன்னாசியில் வைட்டமின் சி போன்றவை அதிகமாக இருப்பதனால் இவை நுண்ணுயிர் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.

சளி மற்றும் இருமல்

அதிகம் சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வரும்போது நல்ல நிவாரணம் கிடைக்கும்.

எலும்புகள்

Pineapple Benefits In Tamil: எலும்புகளை வலுவடையச் செய்யும் அன்னாசி பழத்தில் மாங்கனீசு அதிகம் இருப்பதால் இவை எலும்புகளை வலிமையாக்கும் இணைப்புத் திசுக்களையும் வலிமையாக்கும் ஒரு கப் அன்னாச்சி பழத்தில்  ஒரு நாளைக்கு தேவையான 73 % மாங்கனீஸ் நிறைந்திருக்கும் தினமும் ஒரு கப் அன்னாசி பழத்தை எடுத்து வருவது மூலமாக எலும்புகளை வலுவாக்க ஆக்க முடியும் அதுமட்டுமல்லாமல் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் வலிமை அடைவதுடன் பற்களும் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

கண் நோய்

மாகுலர் திசு செயலிழப்பு சரியாகும் இன்றைய கால தலைமுறையினருக்கு விரைவிலேயே பார்வை கோளாறு ஏற்படுகிறது. அன்னாசி பழத்தில் உள்ள பீட்டா-கரோட்டீன் பார்வையை மேம்படுத்தி மாகுலர் திசு செயலிழப்பு ஏற்படுவதைத் தடுத்து கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கண் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்தஅன்னாசிப்பழத்தை சாப்பிடுவதன் மூலமாக கண் பார்வை தெளிவடைய மற்ற கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் தீரும்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

மூட்டுகள்

அன்னாசிப்பழத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருப்பதால் இதனை ஆத்திரட்டிஸ் நோயாளிகள் சாப்பிட்டு வர மூட்டுகளில் உள்ள வீக்கம் குறைந்து மூட்டுகள் வலிமை அடையும்.

அன்னாசி பழத்தின் நன்மைகள்| Pineapple Benefits In Tamil
அன்னாசி பழத்தின் நன்மைகள்| Pineapple Benefits In Tamil

சைனஸ் மற்றும் தொண்டை

சைனஸ் மற்றும் தொண்டை புண் போன்றவற்றை குணமாக்கும் சக்தி அன்னாச்சி பழத்தில் இருக்கிறது. இதற்கு அதிகம் வளமாக நிறைந்துள்ள பிரம்மலின் தான் காரணம் புற்றுநோயை எதிர்த்துப் போராடக் கூடியது அன்னாச்சி பழம் அன்னாசி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் அளவுக்கு அதிகமாக உள்ளது இதனால் சரும செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது இதன் மூலம் புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது. புற்றுநோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் அன்னாச்சி பழம் சாப்பிட்டு வருவது ரொம்ப நல்லது. அன்னாசிப்பழத்தில் இருக்க கூடிய ஆன்டி-ஆக்சிடன்ட்கள் பிரீ ரடிகல்ஸ் உண்டாகும் பெருந்தமனி தடிப்பு போன்ற ஒரு பிரச்சனைகளும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

இதய நோய்

அதுமட்டுமல்ல உடலில் இருக்கக்கூடிய கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய் வருவதையும் தடுக்கிறது இதயத்தை ஆரோக்கியமாகப் பாத்துக்க மிகவும் உதவியாய் இருக்கிறது. அன்னாச்சி பழத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மையினால் மூச்சுக்குழாயில் உண்டாகும் வீக்கம் காயம் போன்றவை குறைந்துவிடும் இதனால் மூச்சுக்குழல் அழற்சி போன்ற பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கிறது.

உயர் ரத்த அழுத்தம்

உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அன்னாசியை உணவுக் கட்டுப்பாட்டில் சேர்த்து வந்தால் அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியதினால் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் அன்னாசி சாப்பிட்டு வர ரத்த அழுத்தம் சீராக இருக்கும்

வயிற்று புழுக்கள்

Pineapple Benefits In Tamil: வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும் தன்மை அன்னாசிக்கு உண்டு அன்னாசிப்பழத்தில் செரிமான நொதியானா ப்ரோமெலைன்  அதிகமுள்ளது இதை டயட்டில் சேர்க்கும் போது வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறிவிடும் ரத்தத்தை சுத்தமாக்கும் தினமும் அன்னாசிப்பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் இரத்தம் தூய்மையடையும் உடல் புத்துணர்ச்சி பெறும்.

இதையும் படிக்கலாமே…..

பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Health Benefits In Tamil
முருங்கை கீரை நன்மைகள் | Murungai Keerai Benefits
கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் | Calcium Foods In Tamil
புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food In Tamil
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் | Pana Kilangu Benefits In Tamil
ஜாதிக்காய் பயன்கள் | Jathikai Uses In Tamil

Leave a Comment