Thakkali Illamal Kulambu Seivathu Eppadi
Thakkali Illamal Kulambu Seivathu Eppadi: நாம் அன்றாடம் வீட்டில் சமைக்கும் பொருட்களில் தக்காளியும் ஒன்று. அதன் விலை பெருமளவில் அதிகரித்து, நமது செலவினங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கிலோ ரூ.20-30க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ரூ.110-160க்கு விற்கப்படுகிறது. விரைவில் விலை குறையாது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
தக்காளி பற்றாக்குறையை சமாளிக்க, சில நாட்களுக்கு உணவில் சேர்க்காமல் சமாளித்து விடலாம். தக்காளி இல்லாமல் பல உணவுகள் செய்யலாம், அதில் சில பின்வருமாறு.
ரசம்
“என்ன ரசத்துக்கு தக்காளி தேவை இல்லையா” என்று உங்கள் மனக் குரல் நன்றாகவே கேட்கிறது. அது அப்படி இல்லை. தக்காளி இல்லாமல் சுவையாக ரசம் வைத்துக் கொள்ளலாம். உங்கள் வழக்கமான ரசத்தில் தக்காளியைப் பிழிவதற்குப் பதிலாக, இன்னும் கொஞ்சம் புளியைப் பயன்படுத்துங்கள். இது உங்கள் ரசத்தில் தக்காளி இல்லாத உணர்வைத் தராது.
மோர் குழம்பு
வீட்டில் தயிர் இருந்தால், அதை பயன்படுத்தி பல சுவையான உணவுகளை செய்யலாம். அனைவரும் விரும்பி சுவைப்பது மோர் குழம்பு. இதற்கு தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு, கடுகு, சிறிது எண்ணெய் மற்றும் தண்ணீர் போதும்.
இதற்கு தக்காளி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு வகைகளில் இதுவும் ஒன்று.
தேங்காய் சாதம்
தேங்காய் சாதத்தில் தக்காளி சேர்க்கலாமா வேண்டாமா என்பது நம் விருப்பம். துருவிய தேங்காய், வடித்த சாதம், உப்பு, கறிவேப்பிலை மட்டும்தான் தேவை. பொரித்த தேங்காய் துருவலில் உப்பு சேர்த்துக் கிளறினால் தேங்காய் சாதம் ரெடி. இதற்கு ஏன் தக்காளி?
புளியோதரை
தமிழகத்தின் கோடிக்கணக்கான மக்களில் சில கோடி பேர் புளியோதரை காதலர்கள். ‘ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்காத போது நாமெல்லாம் 5 நாள் புளியோதரை சாப்பிட்டோம்’ என்ற விவேக் டயலாக் நினைவிருக்கிறதா?
அதுவும் புளியோதரையின் சிறப்பியல்பு. 3 நாட்களுக்குக் கிளறிய புளியோதரை கெட்டுப் போகாது. பெருமாள் கோவில்களில் மிகவும் சிறப்பாக வழங்கப்படும் இந்த புளியோதரை, நீண்ட பயணங்களில் கூட நமக்கு உதவுகிறது.
இதை செய்ய தக்காளி கூட தேவையில்லை. சிறிது புளி, எண்ணெய், தேவைப்பட்டால் கடலைப்பருப்பு, தண்ணீர் மற்றும் உப்பு போதுமானது. உடலுக்கும் நல்லது, தக்காளி தேவையில்லை.
பன்னீர் பட்டர் மசாலா
Thakkali Illamal Kulambu Seivathu Eppadi: இந்தப் பெயரைப் படித்தாலே உங்கள் நாவில் நீர் வடிகிறதா? அப்படிப்பட்ட வட இந்திய உணவுகளில் ஒன்றுதான் இந்த பன்னீர் பட்டர் மசாலா. இது சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு. இவர்களில் பெரும்பாலானோர் தக்காளியை பயன்படுத்துவதில்லை.
இந்த உணவில் புளிப்பு சுவைக்காக தக்காளி உபயோகிப்பதில்லை. அதற்கு பதிலாக நீங்கள் சிறிது எலுமிச்சை சாரு பயன்படுத்தலாம். இல்லை என்றால் உப்பை சிறிது குறைத்து உப்பு கலந்த வெண்ணெய் பயன்படுத்தலாம்.
காரக்குழம்பு
காரக்குழம்பு புளிப்பு மற்றும் காரமானது மற்றும் பலவிதமான சுவைகளைத் தரும். புளிப்புக்காக சிறிது புளி சேர்க்கப்படுகிறது. இந்த கிரேவியை தக்காளி இல்லாமலும் செய்யலாம். தக்காளி இல்லாமல் புளிப்பு கொஞ்சம் குறைவாக இருக்கும். இதை சரிசெய்ய மிளகாய் பொடியை குறைவாக பயன்படுத்தவும்.
மேலும் இது போன்ற பல்வேறு உணவுகளுக்கு தக்காளி தேவையில்லை
அவியலுக்கு தக்காளி தேவையில்லை.
கூட்டுக்கு கூட தக்காளி தேவையில்லை.
மோர் குழம்பு கூட தக்காளி தேவை இல்லை.
பிசிபெல்லாபாத் தக்காளி தேவையில்லை.
வாங்கி பத்துக்கு தக்காளி தேவையில்லை.
வத்தகுழம்புக்கு கூட தக்காளி தேவை இல்லை.
முள்ளங்கி ரைஸ்
கேரட் ரைஸ்
தேங்காய் சாதம்
பீட்ரூட் ரைஸ்
மாங்காய் சாதம்
நெல்லிக்காய் சாதம்
லெமன் சாதம்
புளியோதரை சாதம்
கருவேப்பிலை சாதம்
கொத்தமல்லி சாதம்
எள்ளு பொடி சாதம்
பருப்பு பொடி சாதம்
ஜீரா ரைஸ் சாதம், பிரண்டை பொடி சாதம்
தயிர் சாதம்
சக்கரை பொங்கல்
மருந்து குழம்புக்கும் தக்காளி தேவையில்லை.
பூசணிக்காய் போட்ட வத்த குழம்புகும் தக்காளி தேவையில்லை.
அட, லெமன் ரசத்துக்கு கூட தக்காளி தேவை இல்லை.
வெஜிடபிள் ரைஸ் கூட தக்காள தேவை இல்லை.
தேங்காய் கூட்டு கூட தக்காளி தேவை இல்லை.
எல்லா வகையான கீரை சாதத்துக்கும் தக்காளி தேவை இல்லை.
சாம்பாரில் கூட தக்காளி இல்லாமல் செஞ்சா நல்லா இருக்கும்.
அக்காரவடிசல் சாதத்துக்கும் தக்காளி தேவை இல்லை.
இதையும் படிக்கலாமே…..