Varahi Amman History In Tamil
Varahi Amman History In Tamil: எதிரிகளை வம்சம் செய்யும் வாராஹி அம்மன். நமக்கு தெரிந்த எதிரிகள் தெரியாத எதிரிகள் அப்படின்னு நிறைய எதிரிகளோட தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் வெளியிலிருந்து வரக்கூடிய எதிரிகளும் உண்டு நம்மை அழிக்கக்கூடிய உள்ளுக்குள்ளேயே இருக்கக்கூடிய சில எதிரிகளாக ஆசை, கோபமாக, பொறாமை, வஞ்சனை இப்படி உள்ளே இருக்கக்கூடிய எதிரிகளும் நமக்கும் இந்த மாதிரி எதிரி பகைகளை போக்கக்கூடிய ஒரு அரும்பெரும் தெய்வமாக விளங்க கூடியவள் வாராஹி.
வாராஹி அம்மன் வரலாறு | Varahi Amman In Tamil
வாராஹி அப்படிங்கற தெய்வம் யாரு அப்படின்னு பார்த்தீங்கன்னா லலிதா திரிபுரசுந்தரி, லலிதா பரமேஸ்வரி அதுக்கப்புறம் புவனேஸ்வரி எல்லாம் சொல்றோம் இல்லையா அந்த ராஜராஜேஸ்வரி அம்பிகையின் உடைய படைத்தலைவியாக விளங்க கூடியவள் இந்த அம்பிகை வாராஹி. இந்த வாராஹி என்கின்ற தெய்வம் சப்த மாதர்களில் ஒருவராக வழங்கக்கூடியவர்கள் கிராமங்களில் சப்த மாதர்களினுடைய வழிபாடு அப்படிங்கறது இன்னும் இருந்து வருகிறது.
ராஜராஜ சோழன் ஏன் வாராஹியை வழிபட்டார்
பெரும் நகரங்களில் ஒரு சில இடங்களில் மட்டும் தான் நம்மால் இந்த சப்த மாதர்கள் ஆதாரங்களை பார்க்க முடிகின்றது அதில் ஒருவராக விளங்கக்கூடிய இந்த வாராஹி அப்படிங்கிற இந்த அம்பிகை சேனை தலைவி, படைத்தளபதி அப்படிங்கற ஒரு பெரிய ஆற்றலை பெற்றவள் என்பதால் தான் தான் ராஜராஜ சோழன் எதை செய்தாலும் இந்த அம்பிகையே வணங்கிவிட்டு தான் செய்வது என்கின்ற பழக்கத்தை ஆரம்பித்தார்.
ராஜராஜ சோழன் தான் கட்டிக் கொண்டிருக்கின்ற காலத்திலேயே தஞ்சை பெருவுடையார் கோயிலில் இந்த அம்பிகையை உலகறிய செய்ய வேண்டும் என்பதற்காக தனி சன்னதி அமைத்துள்ளார். அது இன்றைக்கும் மிகப்பெரிய தனி சன்னதியாக நம் சொல்லனும்னா வாராஹிக்கு தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயத்தில் அமைந்திருக்க கூடிய சன்னதியை கூறலாம். அனைவரும் எந்த வேலையை தொடங்குவதற்கு முன்பும் விநாயகரை வணங்குவார்கள் ஆனால் ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து இந்த வாராகி கிட்ட கேட்டுவிட்டு தான் எதையும் செய்யணும் அப்படின்னு ராஜ ராஜ சோழன் துவங்கி வைத்தார்.
ஏனனில் வெற்றிக்கு உரிய தெய்வம் அப்படிங்குறவள் யாருன்னா இந்த வாராஹி தான் அதனால வெற்றியை வாழ்க்கையில் நமக்கு பரிசாக தரக்கூடியவள். வேறு என்ன எல்லாம் தருவாள் என்றால் நிறைந்த செல்வத்தை தரக்கூடியவள் இந்த வாராஹி இந்த உலகத்துல செல்வம் ,புகழ் ,பதவி இப்படி எது போனாலும் திரும்ப நம்மால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் போனால் திரும்ப வராதது அப்படின்னு சொல்லக்கூடிய மானம் அப்படி என்று ஒன்று இருக்கிறது இல்லையா அந்த தன்மானத்தால் ஒருவர் தகர்க்கப்படுகின்ற போது அவரை தன்மான குறைவாக பேசிய அத்தனை எதிரிகளையும் அழிக்கின்ற தெய்வம் ஒன்று உண்டு என்று சொன்னால் அது வாராஹி அம்மன் தான்.
ஏன் ராஜராஜ சோழனை உங்களுக்கு உதாரணமாக சொல்லுகின்றேன் என்றால் அவர் கட்டிய கோவில்கள் இன்னும் நம்மால் காண முடிகின்றது அது போன்று வாராஹிக்கு தனியாக கட்டிய கோயிலும் நம்மால் காண முடியும் அங்கு சென்றாள்.
மனித உடல் பன்றி உடைய முக அமைப்பு
Varahi Amman In Tamil: அவள் பார்க்கறதுக்குத்தான் கொஞ்சம் பயங்கரமானவர்களா இருப்பா அவளுடைய உருவ அமைப்பு அப்படி பன்றியினுடைய முகம் சாதாரண பன்றி கிடையாது காட்டுப்பன்றி பண்றிங்கறது சாதாரணமா எல்லாத்தையும் சாப்பிடும். ஆனா காட்டுப்பன்றி அப்படி கிடையாது அது என்ன தெரியுமா சாப்பிடணும் பூமியை அகழ்ந்து தோண்டி எடுத்து அதுல இருக்க கூடிய கிழங்கை தின்னக்கூடிய தன்மை இந்த காட்டுப்பன்றிக்கு உண்டு.
ஏன் இதை நான் இவ்வளவு ஆழமாக சொல்கிறேன் என்று தானே நீங்கள் நினைக்கின்றீர்கள் நம் வாழ்க்கையில் இந்த கிழங்கு போல அடியில கிடக்கக்கூடிய பிரச்சனைகளை கூட அகழ்ந்து தோண்டி எடுத்து அதில் வரும் துன்பத்தை நீக்கும் தன்மை இந்த வாராஹிக்கு உண்டு. மேலோட்டமான நன்மையை தருபவள் அல்ல அதற்குத்தான் கூர்மையான அந்த கூர்மையான அந்த பற்களை வைத்திருக்கிறாள் நீங்கள் சாதாரணமான பன்றிகளுக்கு அந்த கூறிய பற்களை பார்க்க முடியாது.
காட்டுப்பன்றியில் மட்டும்தான் பார்க்க முடியும் அதனால அவளுடைய அந்த உருவம் பாத்தீங்கன்னா கோரமா தெரியும் ஆனா மனித உடல் பன்றி உடைய முகம் அந்த ஒரு கூட்ட அமைப்புகளில் அவள் இருக்கின்றதனால் அந்த உருவம் அப்படி இருக்கலாம். ஆனா குழந்தை போன்றவள் அன்னையே நமக்கு ஜகன்மாதா அவள் லோகத்துக்கே தலைவியாக விளங்க கூடியவள் வேறு யாருமே அது அம்பிகையின் இன்னொரு அவதாரம் எல்லாருமே அம்பிகையின் உடைய அவதாரம்தான் அந்த அம்பிகையினுடைய அவதாரமாக விளங்குறதுனால தான் தன் குழந்தைகளை அவமானப்படுத்தியவர்களை தன் குழந்தையை இகழ்ந்து பேசியவர்களை தன் குழந்தைகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய எதிரிகளை துவம்சம் செய்கிறாள் அதனால்தான் கையில் கலப்பை போன்ற ஆயுதங்களை எல்லாம் ஏந்தி இருக்க கூடிய தெய்வமாக அவள் விளங்குகிறாள்.
வாராஹி அம்மனின் சக்தி
இப்போ எல்லாம் ராஜ ராஜ கால்நலத்தில் நடந்தது போல் நடக்குமா, அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னா நம்முடைய வாழ்க்கையில் இப்போ சமீபத்தில் நடந்த ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு உதாரணமாக சொல்கிறேன் எல்லாருக்குமே தெரிந்த ஒரு பிரபலமானவர் நான் பெயர் சொல்ல விரும்பவில்லை.
அந்த பிரபலமானவர் ஏதோ ஒரு சூழ்நிலையில எந்த தவறுமே செய்யாத ஒரு சூழல்ல தவறு செய்தார் அப்படின்னு சித்தரிக்கப்பட்டு பல பேரால் தாக்கப்பட்ட ஒரு பெரிய அவமானத்திற்கு அவர் ஆளாகி இருந்த அந்த நேரத்துல இவ்வளவு அவமானத்தை எனக்கு தந்துவிட்டாயே தெய்வமே நான் யார்கிட்ட போய் முறையிடுவது அப்படின்னு யோசிக்கும் போது அவர் வழிபடும் தெய்வமாக விளங்கிய வாராகி கிட்ட போய் முறையிடுகிறார். கண்ணீர் விட்டு கதறி அம்மா நான் உன்னைத்தானே கும்பிட்டுட்டு இருந்தேன் என் வாழ்க்கையில் இப்படி எல்லாரும் முன்னாடியும் என்னை அவமானப்படுத்த வைத்து விட்டு விட்டாயே நான் யார்கிட்ட போவேன் என் எதிரிகளை எதிர்க்கிற தன்மை எனக்கு கிடையாது.
நான் ரொம்ப எளிமையானவன் நான் ரொம்ப சாதாரண ஆள் அவங்கள போய் என்னால அடிக்க முடியுமா, அவங்கள போய் என்னால தாங்க முடியுமா , இல்ல நான் ஏதாவது பேச தான் முடியுமா எனக்கு அதெல்லாம் இல்ல நான் உண்மையா இருந்தேன் நான் நியாயமா இருந்தேன் நான் நிரபராதி உன்னத்தான் நான் கும்பிட்டேன் உன்னையே நான் சரணாகதி அடைகிறேன் நீயே பார்த்துக்கொள் என்று விட்டுவிட்டுப் போய்விட்டார்.
ஒரு சில நாட்களிலேயே யாரெல்லாம் அவர் எதிர்த்தார்களோ யாரெல்லாம் அவரை தூய்சித்து பேசினார்களோ யாரெல்லாம் கேட்க கூடாத பேசக்கூடாத வார்த்தைகளையெல்லாம் சொன்னார்களோ எல்லாரும் அவர்கிட்ட வந்து மன்னிப்பு கேட்கக்கூடிய ஒரு சூழலை அந்த வாராஹி ஏற்பட்டிருக்கிறார். பல இடங்களில் அவர் இதைப் பற்றி பேசி இருக்கிறார், இவர் பேசும்போது வாராஹி பேசும் தெய்வம் எனக்கு அப்படித்தான் பேசினா உங்களுக்கும் பேசுவா நீங்களும் கும்பிடுங்கள் அப்படின்னு அவர் பேசியுள்ளார்.
இந்த காலத்துல என் கண் முன்னாடி நான் வாழ்ந்த ஒரு நபர் உணர்ச்சி பூர்வமாக சொன்ன தெய்வம் வாராஹி உடைய வழிபாடு. அற்புதமான தெய்வம் அந்த வாராஹி அவள் அப்படியே நினைத்த மாத்திரத்தில் வந்துருவா இது ஏதோ ஒரு மந்திரம் பண்ணி ஒரு தாந்த்ரீகம் பண்ணி ஏதோ ஒரு தீய வழியில் வழிபடுகின்றோமா என்றால் சத்தியமாக கிடையாது.
வாராஹியை எப்படி வழிபட வேண்டும்
Varahi Amman History In Tamil: சரிங்க நீங்க வாராகி பத்தி நிறைய சொல்றீங்க ஆனா எப்படி கும்பிடனும் எங்க போய் கும்பிடணும் அந்த அம்பிகை வழிபடுவதற்கான இடங்கள் நிறைய இருக்கா எல்லாரும் தஞ்சாவூருக்கு போக முடியாது அப்படின்னா.
வேறு சில ஊர்களிலும் வந்து இந்த வாராஹி உடைய உருவ வழிபாடு அப்படிங்கறது அநேகமான கோவில்களில் இருக்கிறது நீங்க உதாரணத்துக்கு பார்த்தீங்க அப்படின்னா திருப்பூர்,விழுப்புரம், நாகை கடலூர் ,தூத்துக்குடி இந்த மாதிரி பல ஊர்கள்ல இன்றைக்கும் வாராஹினுடைய சன்னதி இருக்கக்கூடிய ஆலயங்கள் அமைந்திருக்கிறது.
இந்த மாதிரி ஆலயங்களில் போய் நான் அவளை வழிபடமா இல்ல வீட்டிலேயே நாங்கள் வைத்திருக்கிறோம் நாங்க வழிபடலாமா சிலையா வச்சிருக்கோம் வழிபடமா அப்படின்னா தாராளமா நீங்க வழிபடடலாம். இல்லைங்க படமும் இல்லைங்க இப்படி ஒவ்வொரு தெய்வத்தையும் படமா வாங்கி வாங்கி வச்சோம்னா எங்க பூஜை அறையெல்லாம் பத்தாது நாங்க ரொம்ப சாதாரணமான நிலைமையில் இருக்கிறோம் அப்படிங்கறவங்க ஒன்னு கவலையே பட வேண்டாம் வாராஹி படமாக இல்லாவிட்டாலும் அவள் நமக்கு தீப ரூபத்திலும் எழுந்தருளி அருள் புரிவாய்.
அவளை எப்படி கும்பிடணும் அப்படிங்கிற அந்த முறையை நான் உங்களுக்கு சொல்கிறேன் காலை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்கு உள்ளாக சூரியன் உதிப்பதற்கு முன்பு அப்படி இல்ல அந்த நேரம் எங்களுக்கு சரிவராது அப்படினா மாலை விளக்கு வைத்த ஆறு மணிக்கு பிறகு 7:00 மணிக்கு பண்ணலாம் 8:00மணிக்கு தாராளமா பண்ணலாம் பத்து மணி வரைக்கும் பண்ணலாம் ஒன்னும் தப்பே கிடையாது.
நேரம் செல்ல செல்ல செல்ல அவளுக்கு இன்னும் சக்திகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் இல்லாட்டி இந்த மாலை நேரத்தை தீர்மானம் பண்ணிக்கோங்க ஒரு முறை ஒரு நாளைக்கு இப்ப நீங்க வந்து சாயந்திரம் ஒரு எட்டு மணிக்கு கும்பிடறீங்கன்னு வச்சுக்கோங்களேன் தினம் அந்த எட்டு மணிங்கறதையே ஒரு வழக்கமாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு பெரிய பிரச்சனை ஒரு பெரிய துன்பம் நான் தப்பே பண்ணவில்லை ஆனால் நான் தண்டிக்கப்பட்டு விட்டேன் எனக்கு நியாயத்தை இவள் கொடுத்தே தீர வேண்டும் அப்படின்னு நீங்க ஒரே ஒரு விளக்கு ஒரு சாதாரணமா நம்ம வீட்ல நாம பயன்படுத்தக்கூடிய மண் விளக்கோ இல்லன்னா வந்து பஞ்சலோக விளக்கு வெள்ளி விளக்கு ஏதோ ஒன்னு வாராஹி க்குனு தனியா வைக்கணும்.
நாம எப்போதும் ஏற்றக்கூடிய விளக்கு அல்ல நான் தெளிவா சொல்றேன் வாராஹிக்கு ஒரு சின்ன சட்டி கூட மண் சட்டி விளக்கு கூட ஒன்னும் வச்சுக்கலாம் அதுல நெய் ஊத்தி ஏத்துனா ரொம்ப விசேஷம் இல்லன்னா என்ன ஊத்தியே நீங்க ஏத்தலாம் ஒரே ஒரு விளக்கு வைத்துக் கொள்ள வேண்டும் கொஞ்சம் அதுக்கு மல்லிகை பூ வைக்கணும் வாராஹி நீ இந்த தீபத்தில் எழுந்தருள் எனக்கு அருள் புரி.
வாராஹி மூல மந்திரம் | Varahi Amman History In Tamil
வாராஹினுடைய இந்த மூல மந்திரத்தை நாம் அந்த விளக்கப் பார்த்து ஜெபம் பண்ணனும்.
Varahi Moola Mantram
Om Kleem Varaha muki hreem sithi swaroopini
Shreem thana vasangari thanam varshaya swaha
Varahi Gayathri Mantram
Om Mahishadhwajayai Vidmahe,
Dandahastayai Dhimahi,
Tanno Varahi Prachodayat
Varahi Maha Mantram
Om Aim Hreem Shreem
Aim Gloum Aim Namo Bhagavathi
Varthali varthali
Varahi varahi
varahamuki varahamuki
Anthe Anthini Namaha
Runthe Runthini Namaha
Jambe jambini namaha
Mohe Mohini Namaha
Sthambe Sthambini Namha
Sarvadushta Pradhushtaanaam Sarveshaam
Sarva Vaak Sidha Sakshur Mukagadhi Jihwa
Sthambanam Kuru Kuru
Seegram Vasyam Aim Kloum
Taha Taha Taha Taha
heem ashthraya phat
அந்த மூல மந்திரத்தை முதல்ல நாம பாராயணம் பண்ணனும் பாராயணம் பண்ணிட்டு அதுக்கப்புறம் அந்த தீபத்தில் அவள் எழுந்தருளிய பிறகு நம்முடைய பிரார்த்தனை எல்லாத்தையும் அவள் கிட்ட நாம வைக்கணும்.
இதன் பிறகு இந்த மந்திரத்தை
ஸ்ரீ மஹா வாராஹி மஹாமந்திரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஷ்ரீம்
ஐம் க்லௌம் ஐம் நமோ பகவதி
வார்த்தாளி வார்த்தாளி
வாராஹி வாராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்திணி நம: ருந்தே ருந்தினி நம:
ஜம்பே ஜம்பினி நம: மோஹே மோஹினி நம:
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸர்வேஷாம்
ஸர்வ வாக்சித்த சக்ஷுர் முக கதி
ஜிஹ்வா ஸ்தம்பனம் குரு குரு
ஸீக்ரம் வஸ்யம் ஐம் க்லௌம்
ட:ட:ட: ட: ஹீம் அஸ்த்ராய பட்
சொல்லி என்னுடைய பிரச்சனைகளை உன் திருவடியில் வெச்சிட்டேன் இனிமேல் இதை நீ பார்த்துக்கொள் நான் இன்னார தண்டி இவரை தண்டி இவருக்கு இந்த தண்டனை கொடு என்று நான் கேட்க மாட்டேன் மாட்டேன் நீயே எல்லாவற்றையும் சரி செய்து எனக்கு ஒரு நல்ல நீதியை நல்ல நியாயத்தை எனக்கு கொடு அப்படின்னு சொல்லி அவளை பிரார்த்தனை பண்ணிக்கோங்க.
வாராஹிக்கு நெய்வேத்தியமா என்ன வைக்கலாம்
நெய்வேத்தியமா என்ன வைக்கலாம் அப்படின்னு கேட்டா இவள் காட்டுப்பன்றின் ரூபத்தை உடையவள் என்பதனாலே இந்த அம்பிகைக்கு கிளம்புகள் ரொம்ப விருப்பமானது குறிப்பா சக்கரவள்ளி கிழங்கு ரொம்ப பிடிக்கும் அதனால சக்கரவல்லி கிழங்கு அதுக்கப்புறம் கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட வடை பருப்பினால் செய்யப்பட்ட வடை ஆமை வடைன்னு சொல்றோம் இல்லையா அந்த வடை அது இல்லாம பயறு வகைகளில் செய்யப்படக்கூடிய சுண்டல் போன்ற நெய்வேத்திய பொருள்கள்.
இது இல்லாம வெண்ணெய் கடையாக தயிர்ல செய்யப்பட்ட தயிர் சாதம் அதாவது நல்ல வெண்ணையோடு கூடிய தயிர்சாதம் அப்படி எடுத்துக்கோங்க வெண்ணையோடு கூடிய நல்ல தயிர் சாதம் அதுக்கு அப்புறமா கரும்பு அதுக்கப்புறம் இவளுக்கு ரொம்ப பிடித்த பழங்கள் அன்னாசி, மாதுளை இந்த மாதிரி பழங்கள் வைத்து நீங்கள் வழிபடலாம். இவ்வளவும் வைக்கணுமா என்று பயந்து விடாதீர்கள் இதில் உங்களால் என்ன முடியுமோ அதை வைத்து நீங்கள் வழிபடலாம்.
வாராஹி அம்மனுக்கு பிடித்த உணவுகள்
சக்கரவள்ளி கிழங்கு
மற்ற கிழங்கு வகைகள்
கருப்பு உளுந்தில் செய்யப்பட்ட வடை
பருப்பினால் செய்யப்பட்ட வடை
பயறு சுண்டல்
அன்னாசி பழம்
மாதுளை பழம்
வாழைப்பழம்
நவதானியங்கள்
வாராஹி அம்மனுக்கு பிடித்த மலர்கள்
வாராஹி அம்மனுக்கு பிடித்த மலர்கள் என்ன என்று பார்த்தீர்கள் என்றால் நீல நிற சங்கு பூ ரொம்ப பிடிக்கும் அந்த அம்மாவுக்கு பிடித்தமான நிறமே நீல நிறம், கருப்பு நிறம், சிவப்பு நிறம் அதனால சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடிய செம்பருத்தி பூ செவ்வரளி மலர் இதெல்லாம் அம்மனுக்கு ரொம்ப ரொம்ப விருப்பமான மலர்கள்.
வாராஹி அம்மனை வழிபட வேண்டிய நாட்கள்
இந்த அம்பிகையை வழிபடக்கூடிய நாட்கள் விசேஷமான நாட்கள் ஏதாவது இருக்கா அப்படின்னா கண்டிப்பாக இருக்கு பஞ்சமி, பௌர்ணமி ,அஷ்டமி, தசமி இந்த நாட்கள் இந்த அம்பிகைக்கு விசேஷமான நாட்கள்.
இது தேய்பிறை பஞ்சனியாக இருந்தாலும் சரி வளர்பிறை பஞ்சமியாக இருந்தாலும் சரி அம்மனை வழிபடலாம் துன்பங்கள் தேய வேண்டும் என் பிரச்சனைகள் தீர்ந்து போக வேண்டும் என்று நினைக்கிறவங்க முதல் வழிபாட்டை தேய்பிறை பஞ்சமையில் இருந்து ஆரம்பிக்கிறது ரொம்ப ரொம்ப விசேஷமானது.
அந்த தேய் பிறை பஞ்சமி அன்று இப்ப சொன்ன முறைப்படி நீங்க இந்த அம்பிகையை வந்து வழிபாடு செய்யலாம். நீங்கள் என்ன நினைத்து இந்த வாராஹி அம்மனை வழிபட்டீர்களோ அந்த விஷயம் கூடிய விரைவில் நிறைவேறும்.
வாராஹி அம்மன் கோவில்கள் அமைந்துள்ள இடம் | Varahi Amman Temple In Tamil
Varahi Amman Temple In Tamil: வாராஹி அம்மனுக்கு பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் கோவில்கள் தனியாக அமைந்துள்ளது. வராகி அம்மனுக்கு என சிறப்பாக ராஜராஜ சோழன் கட்டிய வாராகி அம்மன் ஆலயம் தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ளது. இதுபோன்று ராணிப்பேட்டை மாவட்டம் பள்ளூர் என்னும் ஊரில் வாராஹி அம்மனுக்கு புகழ்பெற்ற ஆலயம் ஒன்று அமைந்துள்ளது இங்கு பல்வேறு கணக்கான மக்கள் சென்று வாராகி அம்மனின் அருளை பெற்று வருகின்றனர்.