அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Athipalam Benefits In Tamil
அத்திப்பழங்கள் (Ficus carica) மர வகையைச் சேர்ந்தது, ஆனால் இப்போது உலகின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகின்றன. அத்திப்பழங்கள் ஒரு தனித்துவமான சுவை மற்றும் அமைப்புடன், இனிப்பு, மெல்லும் சதை மற்றும் சிறிய உண்ணக்கூடிய விதைகளிலிருந்து சற்று மொறுமொறுப்பான அமைப்புடன் இருக்கும். பழங்களாகவும் அல்லது உலரவைத்த பழத்தையும் சாப்பிடலாம்.
Athipalam Benefits In Tamil: அத்திப்பழங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித உணவின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றன, மேலும் வரலாறு முழுவதும் பல கலாச்சாரங்களில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன. அவை மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இன்று, அத்திப்பழங்கள் அவற்றின் தனித்துவமான சுவை மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கத்திற்காக தொடர்ந்து உண்ணப்படுகின்றது, மேலும் இது உலகெங்கிலும் உள்ள பல உணவு வகைகளில் பிரபலமான பொருளாகவும் உள்ளது.
அத்திப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
மெக்னீசியம் |
இரும்புச்சத்து |
வைட்டமின் ஏ, சி, பி, கே |
பொட்டாசியம் |
மாங்கனீசு |
காப்பர் ஜிங்க் |
அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Athipalam Benefits In Tamil
உடல் பலம்பெற
உடல் பலவீனத்தை போக்கும் எப்போதும் அதிக சோர்வு அசதி எந்த வேலையும் செய்ய மனம் இன்மை போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களும் நீண்ட நாட்கள் நோயினால் உடல் மெலிந்து உடல் பலவீனமாக இருப்போருக்கு மிகவும் நல்லது அத்திப்பழம் இரவு உணவுக்குப் பிறகு 3 காய்ந்த அத்திப்பழங்கள் உடன் ஒரு கிளாஸ் பால் சேர்த்து 40 நாட்கள் குடித்து வர உடல் பலவீனம் நீங்கி உடல் பலம் பெறும் மேலும் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக வைப்பதற்கு ரொம்பவே உதவக்கூடியது அத்திப்பழம்.
இரத்த அழுத்தம்
Athipalam Benefits In Tamil: இரத்த அழுத்தத்தை குறைக்கும் அத்திப்பழத்தில் பார்த்திங்கனா பொட்டாசியம் சத்து அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்தத்தில் இருக்கக்கூடிய எலக்ட்ரோலைட்ஸ்ஐ சமமாக வைக்கும் இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும் குறைக்கும் இதன் மூலமாக உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைக்கும். இதுபோன்று பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் இரண்டிலிருந்து மூன்று அத்திப்பழங்களை முந்தின நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த அத்திப் பழத்தையும் நீரையும் சாப்பிட்டு வர அந்த நாள் முழுவதுமே ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
உடல் எடை
இன்றைய காலக்கட்டத்தில் உண்ணக்கூடிய தவறான உணவு முறையால், உடல் எடை அதிகமாகிவிடுவதால், நார்ச்சத்து நிறைந்த அத்திப்பழத்தை சாப்பிட்டால், அத்திப்பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடல் பருமனை தடுக்கும்.
இதயம்
இருதயத்தை பலப்படுத்தும் பொதுவாகவே இருதயம் பலமாக இருக்க அதிக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த ஒரு பழம் அத்திப்பழம் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மட்டுமில்லாமல் பெக்டின் என்று சொல்லக்கூடிய ஒருவகை நார்ப்பொருளும் அதிகம் உள்ளது. இது இதயத்தை பலப்படுத்துவதோடு இருதய இரத்தக் குழாய்களில் படிய கூடிய கெட்ட கொழுப்பினை கரைக்கும் இதன் மூலமாக இருதய அடைப்பு போன்ற பிரச்சினையை வராமலும் தடுக்க கூடியது அத்திப்பழம்.
எலும்புகளை வலுவாக்கும்
Athipalam Benefits In Tamil: எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையான கால்சியம் பாஸ்பரஸ் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இருக்கக்கூடியது. ஒரு ஒரு 100 கிராம் அத்திப்பழத்தில் 35 மில்லி கிராம் கால்சியம் சத்து இருக்கும் மூட்டு வலி முதுகு வலி போன்ற எலும்பு சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டு வர எலும்புகள் வலுவாகும் மற்றும் இதில் இருக்கக்கூடிய விட்டமின் சி மற்றும் விட்டமின் கே போன் டென்சிட்டி என்று சொல்லக்கூடிய எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் இதன் மூலமாக ஆஸ்டியோபோரசிஸ் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்க கூடியது அத்திப்பழம்.
இரத்த சோகை
இரத்த சோகை பிரச்சினை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்று பார்த்தால் உடலில் போதுமான அளவு இரும்புச்சத்து இல்லாமல் இருப்பது ஒரு முக்கியமான காரணம் இந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு பழம் அத்திப்பழம் 100 கிராம் காய்ந்த அத்திப்பழம் 0.8 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இதனால் இரத்தத்தில் இருக்கக்கூடிய இரும்புச் சத்தின் அளவு அதிகரித்து உடலில் இருந்து புதிய சிவப்பணுக்கள் எண்ணிக்கை உற்பத்தி செய்வதற்கு உதவி செய்யும். மேலும் இரத்த சோகை பிரச்சனையால் அவதிப்படுறவங்க தினமும் நான்கிலிருந்து ஐந்து அத்திப்பழங்களை முதல் நாள் இரவே நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீருடன் அத்திப்பழங்களை சாப்பிட்டு வர விரைவில் இரத்த சோகை பிரச்சினை குணமாகும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் அத்திப் பழத்தில் இனிப்புச் சுவை உண்டு என்பதால் அத்திப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் பழங்களை சாப்பிடக்கூடாது. அத்திக்காயை சாப்பிட வேண்டும். சர்க்கரை நோயினால் அவதிப்படுபவர்கள் அத்திக்காயை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் |
மலச்சிக்கல்
மலச்சிக்கலை குணமாகும் நீண்ட நாட்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது அத்திப்பழம் அத்தி பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் இருக்கிறது இது குடலின் உட்பகுதியில் ஒரு வழவழப்புத் தன்மை ஏற்படுத்தி குடலியக்கம் சீராக இயங்கவும் மலம் எளிதாக வெளியேற உதவி செய்யும் இதன் மூலமாக மலச்சிக்கலும் குணமாகும் இது மட்டுமில்லாமல் நாட்பட்ட மலச்சிக்கல் பிரச்சினை காரணமாக உண்டாகக்கூடிய ஆசனவாய் வெடிப்பு போன்ற பிரச்சினைகள் வராமலும் தடுக்க கூடியது இந்த அத்திப்பழம்.
செரிமானத்தை எளிதாக்கும்
Athipalam Benefits In Tamil: செரிமானத்தை எளிதாக்கும் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கக் கூடிய உணவை கூட எளிதில் ஜீரணமாகும் தன்மை அத்திப்பழத்திற்கு உண்டு. உணவை சாப்பிட்ட பிறகும் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய பிசின் என்னும் அரிய வகை என்சைம் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உதவி செய்யும் செரிமானம் ஆவதில் சிரமம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பது இதுபோன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் உணவு சாப்பிட்டபின் ஒரு அத்திப்பழத்தை சாப்பிட்டு வர செரிமானம் எளிதாக நடைபெறும்.
பற்களை பலமாக்கும்
பற்களைப் பலமாக்கும் பற்களை பலவீனப் படுத்தக் கூடிய பற்சொத்தை வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த அத்திப்பழத்திற்கு உண்டு அதன் ஆன்டிபாக்டீரியல் பண்புகள் பற்களில் உண்டாகக்கூடிய கிருமிகளை அழித்து பற்சொத்தை வராமல் தடுக்கும்.மேலும் இந்த அத்தி பழத்தில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் பற்களை பலமாகவும் வைத்துக் கொள்ளும்.
குழந்தைமை பிரச்சனை
குழந்தைமை பிரச்சனையை குணமாக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் ஏற்படக் கூடிய பாலியல் சார்ந்த பிரச்சினைகளை எளிதில் குணமாகக் கூடியது அத்திப்பழம். அத்தி பழத்தை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர முறையற்ற மாதவிடாய் சீர்படுத்துவது. கர்ப்பப்பை சார்ந்த எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கக்கூடியது அத்திப்பழம் குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படக் கூடிய விந்தணு குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல ஒரு தீர்வு தரக்கூடியது அத்திப்பழம் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ வைட்டமின் பி சி பொட்டாசியம் காப்பர் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் புதிய விந்தணு உற்பத்திக்கு உதவி செய்யும் இதன் மூலமாக குழந்தை பிரச்சினையும் எளிதில் குணமாகக் கூடியது அத்திப்பழம்.
வீக்கத்தைக் குறைக்கலாம்
அத்திப்பழத்தில் குர்செடின் மற்றும் கேம்ப்ஃபெரால் போன்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கலவைகள் உள்ளன, அவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
உங்கள் உணவில் அத்திப்பழங்களைச் சேர்ப்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் மற்றும் உங்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க இது ஒரு வழியாகும்.
இதையும் படிக்கலாமே…..