ஐசிசி ரேங்கிங் : டாப் 10 இடத்திற்குள் வந்த மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்
சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது.
டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
34 வயதான ஹர்மன்பிரீத் கவுர் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹர்மன்பிரீத் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் ஆனது.

தற்போது, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மகளிர் கிரிக்கெட் அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி20 போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில் 115-ரன்கள் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் 35 பந்துகளைச் சந்தித்த ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அவரது நிலையான ஆட்டத்தால் ஐசிசி டி20 தரவரிசையில் 6வது இடத்தில் உள்ளார்.

தி ஹில்லா மெக்ராத், பெத் மூனி, ஸ்மிருதி மந்தனா, சோஃபி டிவைன் மற்றும் சுசி பேட்ஸ் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். டி20 அணிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா, நியூசிலாந்து அணிகள் முதல் 5 இடங்களில் உள்ளன.
<<– For More Trending News Click Here –>> |