சென்னையில் நேற்று விடிய விடிய மழை… பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை…

சென்னையில் நேற்று விடிய விடிய மழை.. பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை.

Chennai lashes rain in several parts: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.

வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஜூலை 18-ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கே.கே. நகர், கிண்டி, திருவான்மியூர், ஆலந்தூர், ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், மடிப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர், மாம்பலம், ஆழ்வார்பேட்டை, நந்தனம், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதேபோல் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஒரகடம், வாலாஜாபாத், செவிலிமேடு, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர்மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

chennai lashes rain in several parts
chennai lashes rain in several parts

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மின்சாரம் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை காரணமாக துண்டிக்கப்பட்டது பலத்த காற்று வீசியதால்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, பெரியபேட்டை, கொடையாஞ்சி, அம்பலூர், சிக்கனங்குப்பம், பஜார் ரோடு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.

இதேபோல் ஆம்பூர், கனிகாபுரம், ரெட்டித்தோப்பு, சாணங்குப்பம் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கடந்த ஒரு வாரமாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மின்சாரம் பல பகுதிகளில் முன்னெச்சரிக்கை காரணமாக துண்டிக்கப்பட்டது பலத்த காற்று வீசியதால்.

<<– For More Trending News Click Here –>>

Leave a Comment