பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palan In Tamil
Palli Vilum Palan In Tamil: நம் நாட்டில் பல சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. காக்கைக்கு உணவு வைப்பது நம் முன்னோருக்கு உணவு அளிப்பதற்கு சமம் என்றும் காக்கை நம் வீட்டின் முன் வந்து கரைந்தால் உறவினர்கள் வருவார்கள் என்பது போன்று பல சாஸ்திர விதிகள் கூறுகின்றன.
அந்த வகையில் பல்லி நம் உடம்பின் மீது விழுவதை வைத்தும் பலன்கள் சொல்லப்படுகின்றன.பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்பதை பற்றி பார்ப்போம்
பல்லி விழும் பலன்கள் | Palli Vilum Palan In Tamil
பல்லி தலையில் விழுந்தால்
முதலில் பல்லி தலையில் விழுந்தால் என்ன என்பதை பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். பல்லி தலையில் விழுந்தால் அவர்களுக்கு வரப்போக இருக்கும் கெட்ட நேரத்தை குறிக்கின்றது.
பல்லி தலையில் விழுந்தால் அவருக்கு வரை இருக்கும் கெட்ட சகுணத்தை குறிக்கின்றது அவரின் கெட்ட நேரத்தை பற்றி பல்லி சொல்லும் எச்சரிக்கையாக பார்ப்பது. தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு மனநிம்மதி இழத்தல் நடக்கக்கூடும் இது போன்ற கெட்ட குணத்தை இது உணர்த்தும். உறவினர் அல்லது நன்கு தெரிந்தவர்களுக்கு மரணம் ஏற்படலாம்.
உங்கள் உடலில் பல்லி ஓடினால் உங்களுக்கு தீர்க்க ஆயுள் என்று அர்த்தம்.
தலையின் வலது பக்கம் பல்லி விழுந்தால்
அந்த கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டும் என்று மறைமுகமாக குறிக்கின்றதாம் பல்லி. இது மட்டும் இன்றி மற்றவர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இன்றி இருப்பார்கள், மேலும் உறவினர்கள் அல்லது நன்கு தெரிந்தவர்களுக்கு மரணம் ஏற்படலாம்.
தலைமுடியில் பட்டு விழுந்தால்
தலையில் விழாமல் தலைமுடியில் பட்டு விழுந்தால் ஏதேனும் ஒரு வகையில் நன்மை நிகழும் எனக் கூறப்படுகின்றது.
பல்லியின் பழம் – வயிறு
வயிற்றில் பல்லி விழுந்தால் கிடைக்கும் பலன்கள்: வயிற்றின் இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சியும், வயிற்றின் வலது பக்கம் பல்லி விழுந்தால் தானியமும் கிடைக்கும்.
புருவத்தில் பல்லி விழுந்தால்
புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜ பதவி எனும் உயர் பதவியில் உள்ளவர்கள் இடம் இருந்து உதவி கிடைக்கும்.
மூக்கின் மீது பல்லி விழுந்தால்
பல்லி மூக்கின் மீது விழுந்தால் நோய் அறிகுறி மற்றும் கவலை உண்டாகும்.
பாதத்தில்
பாதத்தில் பல்லி விழுந்தால் வரும் காலத்தில் நீங்கள் வெளிநாடு பயணம் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது அர்த்தம்.
முதுகுப் பகுதி
முதுகுப் பகுதியில் பல்லி விழுந்தால் கவலை மற்றும் துன்பம் ஏற்படலாம்
காதின் மீது பல்லி விழுந்தால்
வலது காதின் மீது பல்லி விழுந்தால் நல்ல ஆயுதம் இடது காதின் மீது விழுந்தால் வியாபார உயர்வும் கிடைக்கும் பெறுவீர்.
நெற்றியில் பல்லி விழுந்தால்
நெற்றி மீது பல்லி விழுந்தால் நல்ல சகுனமாக பார்க்கப்படுகின்றது.
நெற்றியின் இடது பகுதியில் விழுந்தால் கீர்த்தி அல்லது புகழ் கிட்டும் என்றும்.
நெற்றியில் வலது பக்கம் விழுந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும் என சாஸ்திரம் கூறுகின்றது.
முகத்தில் பல்லி விழுந்தால்
முகத்தில் பல்லி விழுந்தால் அவர்கள் வீட்டிற்கு உறவினர்களின் வருகை இருக்கும் என அர்த்தமாகும்.
கண்கள் மீது பல்லி விழுந்தால்
கண்களின் மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு காரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்பட கூடும் என்பது அர்த்தம்.
இடது பக்க கண்ணில் பல்லி விழுந்தால் சுகம்.
வலது கண் பக்கம் பல்லி விழுந்தால் தண்டனைகள் கிடைக்கும்.
கை மற்றும் காலில்
நம் உடலின் இடது கை அல்லது இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய தினம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சி கிடைக்கும் என்பது ஐதீகம்.
நம் உடலின் வலது கை அல்லது வலது காலில் பல்லி விழுந்தால் அன்றையதினம் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது அர்த்தமாகும்.
மார்பு பகுதியில்
வலது மார்பின் மீது பல்லி விழுந்தால் லாபம் கிடைக்கப்பெறும்.
இடது மார்பின் மீது பல்லி விழுந்தால் அவர்களுக்கு சுகம் கிடைக்கப்பெறும்.
தொப்புள் பகுதியில்
தொப்புள் பகுதியில் பல்லிவிழுந்தால் மிகவும் விலைமதிப்பு மிக்க பொருட்களான தங்கம் வைரம் ரத்தினம் போன்ற பொருட்கள் வாங்கும் வாய்ப்பு கிடைக்கபெறும்.
தொடைப்பகுதியில்
தொடைப்பகுதியில் பல்லி விழுந்தால் அவருடைய பெற்றோருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் செயலை செய்தீர்கள் என உணர்த்தும்.
பல்லி விழும் பலன் – இடது கை அல்லது இடது கால்
பல்லி காலில் விழுவதால் கிடைக்கும் பலன்கள்:- இடது கை மற்றும் இடது கால் மீது பல்லி விழுந்தால், அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சியைக் குறிக்கிறது.
வலது கை அல்லது வலது பாதமாக இருந்தால் உங்களுக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருக்கும் என்று அர்த்தம்.
பல்லி விழும் பலன்(palli vilum palan) – மூக்கு பகுதியில்
இடது மூக்கு பக்கம் பல்லி விழுந்தால் கவலை.
வலது மூக்கு பக்கம் பல்லி விழுந்தால் வியாதி.
வயிற்றுப் பகுதி
வயிற்றுப் பகுதியில் பல்லி விழுந்தால் தானியம் லாபம் ஏற்படும்
கழுத்துப்பகுதியில்
இடது பக்க கழுத்துப்பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும்.
வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.
முழங்கால்
முழங்கால் இடது பகுதியில் பல்லி விழுந்தால் சுகம், வலது பகுதியில் பல்லி விழுந்தால் பிரயாணம் ஏற்படும்.
பரிகாரத்தை பற்றி பார்ப்போம் | Palli Vilum Palan In Tamil
Palli vilum palan in tamil: நம் உடலின் எந்த பாகத்தின் மீதும் பல்லி விழுந்தாலும் உடனே குளித்து விடுங்கள்.
குளித்த பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யுங்கள் அல்லது வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபட்டு பல்லி விழுந்ததால் எந்த கெட்ட செயலும் நடந்துவிடக் கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள்.
இல்லையெனில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளியினால் செய்யப்பட்ட பல்லியின் சிலையில் தொட்டு வணங்குங்கள். இந்தப் இந்தப் பல்லிகளை வணங்கினால் நம் மீதுள்ள தீய தாக்கங்கள் மற்றும் வருங்காலத்தில் பல்லி விழுந்ததால் ஏற்படக்கூடிய தோஷங்களை நீக்கி நன்மை கிடைக்கும்.
TAMIL KATTURAI |