போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் 6,80,000 ரூபாய் பெறக்கூடிய அருமையான திட்டம்..! | Post Office Time Deposit Scheme in Tamil

Post Office Time Deposit Scheme in Tamil..

இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு மிகவும் அவசியம். பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளன. அதாவது வங்கிகள், அஞ்சலகம் போன்றவற்றில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன.இவ்வாறு இன்றைய பதிவில் அஞ்சலகத்தில் 5 ஆண்டுகளில் 6,80,000 ரூபாய் சம்பாதிக்கும் அற்புதமான திட்டத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். அதாவது போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் ஸ்கீம் பற்றிய விவரங்களைப் பார்க்கப் போகிறோம். எனவே பணத்தை சேமிக்க விரும்புபவர்கள் அனைவரும் இந்த கட்டுரையை முழுமையாக படித்து பயனடையுங்கள்.

Post Office Time Deposit Scheme in Tamil

வயது தகுதி

18 வயது நிரம்பிய அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தில் ஒற்றைக் கணக்கு மற்றும் கூட்டுக் கணக்கு இரண்டையும் தொடங்கலாம்.

டெபாசிட் முறை

இந்த திட்டத்தில் நீங்கள் கணக்கு தொடங்கும் போது மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இடையில் டெபாசிட் செய்ய வேண்டியதில்லை.

வைப்பு தொகை

இந்தத் திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ 1000 மற்றும் அதிகபட்சம் நீங்கள் விரும்பும் எந்தத் தொகையையும் டெபாசிட் செய்யலாம்.

கால அளவு

இந்தத் திட்டத்தில் நீங்கள் 4 வகையான தவணைகளில் கணக்கைத் திறக்கலாம்.

1 1 வருடம்
2 2 ஆண்டுகள்
3 3 ஆண்டுகள்
4 5 ஆண்டுகள்

 

வட்டி விகிதம்

கால அளவு வட்டி விகிதம்
1 வருடம் 6.60%
2 வருடம் 6.80%
3 வருடம் 6.90%
5 வருடம் 7%

 

ஒரு உதாரணமாக இத்திட்டத்தில் 1 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்..?

கால அளவு டெபாசிட் தொகை வட்டி/வருடம் மொத்த வட்டி மொத்தமாக
கிடைக்கும் தொகை
5 வருடம் 1 லட்சம் 7,185 ரூபாய் 35,929 ரூபாய் 1,35,929 ரூபாய்
5 வருடம் 2 லட்சம் 14,371 ரூபாய் 71,858 ரூபாய் 2,71,858 ரூபாய்
5 வருடம் 3 லட்சம் 21,557 ரூபாய் 1,07,788 ரூபாய் 4,07,7888 ரூபாய்
5 வருடம் 4 லட்சம் 28,745 ரூபாய் 1,43,717 ரூபாய் 5,43,7717 ரூபாய்
5 வருடம் 5 லட்சம் 35,929 ரூபாய் 1,79,647 ரூபாய் 6,79,647 ரூபாய்

 

இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க —>> Click Here

Leave a Comment