உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் | Urulaikilangu Benefits In Tamil

உருளைக்கிழங்கின் நன்மைகள் மற்றும் தீமைகள்

Urulaikilangu Benefits In Tamil: நம் வீட்டின் சமையலறையில் அதிகப்படியான கிழங்கு வகைகள் உள்ளன, ஆனால் அனைவருக்கும் பிடித்தமான முக்கியமான ஒரு கிழங்கு என்ன என்றால் அது உருளைக்கிழங்கு மட்டுமே.

சோலானம் டியூபரோசம் (solanum tuberosum) என்ற விஞ்ஞான பெயரைக் கொண்ட இக் கிழங்கு. ஒரு சரியான வடிவமே இல்லாமல் அழகற்றதாக காணப்படும் அப்படியிருந்தும் உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஒரு கிழங்காக உள்ளது. உருளைக்கிழங்கின் நன்மைகள்/தீமைகள் என்னவென்று ஒவ்வொன்றாக காண்போம்.

உருளைக்கிழங்கின் நன்மைகள் | Urulaikilangu Benefits In Tamil

உருளைக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

கார்போஹைட்ரேட்

வைட்டமின் சி

வைட்டமின் பி

பொட்டாசியம்

மக்னீசியம்

பாஸ்பரஸ்

நார்ச்சத்து

சரும பிரச்சனை

உருளைக்கிழங்கில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் ஆகிய கனிமங்கள் சருமத்துக்கு மிகவும் நல்லது மேலும் பச்சை உருளைக் கிழங்கை அரைத்து எடுத்து தேனுடன் கலந்து சருமத்தில் தடவினால் சருமம் மிளிரும் மேலும் இது பரு மற்றும் சரும தொற்றுக்களை குணப்படுத்த உதவுகிறது.

செரிமான பிரச்சனை

உருளைக் கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் அது சோகமான செரிமானத்துக்கு உதவியாக இருக்கும் அதனால் நோயாளிகள் குழந்தைகள் மற்றும் செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இது சிறந்த உணவாக விளங்குகிறது.

எடை மேலாண்மை

உருளைக்கிழங்கில் உள்ள அதிக நார்ச்சத்து முழுமை உணர்வுகளை ஊக்குவிக்க உதவும், இது எடை நிர்வாகத்திற்கு உதவலாம்.

இதய ஆரோக்கியம்

உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம் உள்ளடக்கம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கூடுதலாக, சில ஆய்வுகள் உருளைக்கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளது, இது இதய ஆரோக்கியத்தை மேலும் மேம்படுத்துகிறது.

வாய்ப்புண்

உருளைக்கிழங்கு வாய்ப்புண் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும் பச்சை உருளைக் கிழங்கை அரைத்து புண்களின் மேல் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.

மூளை

மூளையின் நல்ல செயல்பாட்டுக்கு குளுக்கோஸ் சத்து வைட்டமின் சில வகைகள் சில ஹார்மோன்கள் அமினோ அமிலம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கிறது உருளைக்கிழங்கு மேற்கூறிய அனைத்தையும் தருவதால் மூளையின் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கினால் அவதிப்படுவோருக்கு இது ஒரு வளமான ஆற்றல் கொண்ட உணவாகும். ஏனென்றால் இது சுலபமாக செரிமானம் ஆகிவிடும் ஆற்றல் இருக்கிறது. எனினும் இதை அதிகமாக உட்கொண்டால் அதிக அளவு ஸ்டார்ச் அதிக அளவு ஸ்டார்ச் உடன் உள்ளே செல்வதால் வயிற்றுப்போக்கு அதிகரிக்க செய்யும் இதனால் கவனமாக இருப்பது நல்லது.

காயங்கள்

உருளைக்கிழங்கின் சாறை எரிகாயம், சிராய்ப்புகள், சுளுக்கு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க பெரிதும் உதவுகிறது.

செரிமான ஆரோக்கியம்

Urulaikilangu Benefits In Tamil: உருளைக்கிழங்கில் உள்ள நார்ச்சத்து, நன்மை செய்யும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஆதரித்து, மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தம் தீர

 தவறான உணவு உண்பவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், அதிக எடை கொண்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்த பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே இந்த உருளைக்கிழங்கில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. எனவே இது இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது.

மேலும் இந்த பொட்டாசியம் சத்து நமது உடலில் பாயக்கூடிய இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறையும்.

எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக்கிழங்கை சரியான விகிதத்தில் சாப்பிடுவது நல்லது.

இரத்தச் சர்க்கரைக் கட்டுப்பாடு

மாவுச்சத்து நிறைந்த காய்கறியாக இருந்தாலும், உருளைக்கிழங்கு ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது அவை இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.

தடகள செயல்திறன்

உடற்பயிற்சிக்கு முன் அல்லது உடற்பயிற்சியின் போது உருளைக்கிழங்கை உட்கொள்வது தடகள செயல்திறனை மேம்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன.

சிறுநீரக கற்கள் கரைய

Urulaikilangu Benefits In Tamil: அன்றாடம் உண்ணும் உணவில் யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், எதிர்காலத்தில் சிறுநீரகக் கற்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம். சிறுநீரகக் கற்களை உருவாக்கக்கூடிய கால்சியம் மற்றும் இரும்புச் சத்தும் இருந்தாலும், அந்த கால்சியம் பொருட்களைக் கரைக்கும் மெக்னீசியமும் இதில் நிறைந்துள்ளது. சிறுநீரகக் கல் உருவாவதைத் தடுக்க விரும்புபவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், உருளைக்கிழங்கை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் உருவாகியுள்ள சிறுநீரகக் கற்களை விரைவில் கரைத்து வெளியேற்றும்.

Urulaikilangu Benefits In Tamil
Urulaikilangu Benefits In Tamil

உருளைக்கிழங்கின் தீமைகள்

இவ்வளவு நேரங்கள் உருளைக்கிழங்கு நன்மைகளைப் பார்த்தோம். ஒரு உணவுப் பொருள் என்றால் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும் அதேபோல உருளைக்கிழங்கின் ஒரு சில பாகங்கள் தீமை விளைவிக்கக் கூடியது அதை பதிவு செய்ய வேண்டியது எங்கள் கடமை ஆகும் உருளைக்கிழங்கின் இலைகள் மற்றும் பழங்கள் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை இதில் ஆர்சனிக் போன்ற அல்கலாய்டுகள் உள்ளதால் அதிகளவு உடலும் சென்றால் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

அதுமட்டுமல்லாமல் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கச் செய்வதால் உருளைக்கிழங்கு பருமனாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

இந்த உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொள்வதால் தலைவலி, உயர் இரத்த அழுத்தம், காய்ச்சல் மற்றும் விரைவான நாடி துடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கர்ப்ப காலத்தில் இந்த முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். காரணம், கர்ப்ப காலத்தில் இதை சாப்பிடுவதால் குழந்தைக்கு பிறவி குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

முளைத்த உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் முளைத்த உருளைக்கிழங்கில் அதிக நச்சுகள் உள்ளன. எனவே குடல் தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

இந்த முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் அதிக வாயு கோளாறுகள் ஏற்படும்.

உருளைக்கிழங்கு பெரும்பாலும் French fries அல்லது potato chips போன்ற பல்வேறு வடிவங்களில் உட்கொள்ளப்படுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், இது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் உப்புகளில் அதிகமாக இருக்கும். எனவே, உருளைக்கிழங்கை மிதமாகவும், சுட்ட அல்லது வேகவைத்த உருளைக்கிழங்கு போன்ற ஆரோக்கியமான வடிவங்களிலும் உட்கொள்வது அவசியம்.

ஆகவே நல்ல உணவு பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் நோயற்ற வாழ்வை வாழுங்கள்.

இதையும் படிக்கலாமே…..

பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Health Benefits In Tamil
முருங்கை கீரை நன்மைகள் | Murungai Keerai Benefits
கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் | Calcium Foods In Tamil
புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food In Tamil
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள் | Pana Kilangu Benefits In Tamil
ஜாதிக்காய் பயன்கள் | Jathikai Uses In Tamil

Leave a Comment