மருத்துவ பயனுடைய சுண்டைக்காய் சூப் செய்முறை | Sundakkai Soup in Tamil

சுண்டைக்காய் சூப் செய்முறை | Sundakkai Soup in Tamil

Sundakkai Soup in Tamil: சுண்டக்காயில் இரும்புச் சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இந்த சூப் காய்ச்சல், அல்சர் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இந்த சூப்பை தொடர்ந்து சாப்பிடுவதால் சர்க்கரை குறைகிறது. இந்த அற்புதமான செய்முறையை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். சுண்டைக்காய் சூப் is very easy soup recipe.

தேவையான பொருட்கள்

  • வேக வைத்த பாசிப் பருப்புத் தண்ணீர் – 1 கப்
  • பச்சை சுண்டைக்காய் – 1 கப்
  • எலுமிச்சைச்சாறு – 1 மேஜைக்கரண்டி
  • வெண்ணெய் – 1 மேஜைக்கரண்டி
  • தக்காளி – 1
  • வெங்காயம் – 1
  • சீரகத்தூள் – தேவைக்கேற்ப
  • மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
  • உப்பு – தேவைக்கேற்ப

சுண்டைக்காய் சூப் செய்முறை

தேவையான அளவு சுண்டைக்காயை ஒன்றிரண்டாக நசுக்கிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும் வெண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சுண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து வேக விடவும். இதனுடன் வேக வைத்த பாசிப்பருப்புத் தண்ணீரை சேர்க்கவும், பிறகு நன்றாக கலக்கவும்.

சுண்டைக்காய் நன்கு வெந்த பின்பு (அப்பொழுது தான் அதன் கசப்புத் தன்மை இழக்கும்) இறக்கி, மிளகு, சீரகத்தூள் , எலுமிச்சைச் சாறு சேர்த்து விட்டால் சூப் தயார்.

இதையும் நீங்கள் படிக்கலாமே…..

இது போன்று மற்ற சூப் செயல்முறைகளுக்கு Click Here

Leave a Comment